Posted by S Peer Mohamed
(peer) on 5/25/2011
|
|||
வள்ளியூர் : வள்ளியூர் கனரா பாங்க் ஏடிஎம்ல் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கண்ணாடி கதவை மாற்ற வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் ஏடிஎம் உள்ளே பாங்க் வாடிக்கையாளர்கள் செல்ல பயந்து வேறு ஏடிஎம்மிற்கு செல்கின்றனர். இந்த கண்ணாடி கதவு உடைந்து சில நாட்களாகியும் பாங்க் நிர்வாகம் அதனை சீரமைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க பயந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த ஏடிஎம் அருகில்தான் கனரா பாங்க்கும் உள்ளது. இந்த பாதையில்தான் பாங்க் ஊழியர்கள் செல்ல வேண்டும். ஆனால் பாங்க் ஊழியர்கள் கண்ணாடி கதவு உடைந்திருப்பதை கண்டு கொள்ளவில்லை என்று பாங்க் வாடிக்கையாளர்கள் வருத்தப்படுகின்றனர். உடனடியாக கண்ணாடி கதவை சரிசெய்ய வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Source: Dinamalar: http://www.dinamalar.com/district_detail.asp?id=246872
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |