Posted by S Peer Mohamed
(peer) on 5/26/2011
|
|||
மதுரை : மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடி (டோல்கேட்) கட்டணம் செலுத்தும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. மதுரையில் இருந்து, கன்னியாகுமரி வரையிலான என்.எச்., 7 ரோட்டில், 231 கி.மீ., இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேம்பாடு செய்து பராமரித்திடும் பணி, 2002ல் ஒப்படைக்கப்பட்டது. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வந்த நிலையில், மதுரை - சென்னை, மதுரை - பெங்களூரு நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நிறைவடைந்து, சுங்கச்சாவடி கட்டணமும் இரு ஆண்டுகளாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக, நெல்லை - பணக்குடி பிரிவுக்கு உட்பட்ட நாங்குநேரியில் சுங்கச்சாவடி நேற்று முதல் செயல்பட துவங்கியது. கார், ஜீப், வேன்களுக்கு 65 ரூபாய். ஒரே நாளில் சென்று வர, 95 ரூபாய். மாதாந்திர பாஸ், 2,095 ரூபாய். இலகுரக வாகனங்கள், மினி பஸ், 100 ரூபாய், ஒரே நாள் சென்று வர, 145 ரூபாய், ஒரு மாதம், 3,270 ரூபாய். பஸ், டிரக், 200 ரூபாய், ஒரே நாளில் சென்று வர, 300 ரூபாய், ஒரு மாதம், 6,720 ரூபாய். கனரக வாகனங்களுக்கு, 310 ரூபாய், ஒரே நாளில் சென்று வர, 465 ரூபாய், ஒரு மாதம், 10 ஆயிரத்து 320 ரூபாய் கட்டணம் என, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் இன்னும் நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடையவில்லை. இந்த பணிகளும் நிறைவடைந்தால், திருமங்கலம், கயத்தாறு, கோவில்பட்டியிலும் புதிதாக அமைய உள்ள மூன்று சுங்கச்சாவடிகளுக்கும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=245460
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |