ஏர்வாடி : ஏர்வாடி டவுன் பஞ்., தலைவராக சுயேட்சையாக போட்டியிட்ட
ஆசாத் என்பவர் 666 ஓட்டு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.ஏர்வாடி
டவுண் பஞ்.,சில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த டவுன் பஞ்.,சில் மொத்தமுள்ள
11,135 ஓட்டுகளில் 7,560 ஓட்டுகள் பதிவாகின. இதில் வேட்பாளர்களாக போட்டியிட்ட
அபுபக்கர் (காங்.,)-136, அபுபக்கர் சித்திக் (திமுக)-2665, ஆசாத் (சுயே)-3331,
சுரேஷ்லாசர் (சுயே)-76, ஷேக்உதுமான் (சுயே)-158, மாணிக்கம் (தேமுதிக)-90,
முத்துமாறன் (சுயே)-338, காஜாமுகைதீன் (அதிமுக)-766 ஓட்டுகள்
பெற்றுள்ளனர்.
இதில் சுயேட்சையாக போட்டியிட்ட ஆசாத் திமுக வேட்பாளரை விட 666
ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 8
பேர்களில் திமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட்
இழந்தனர்.
வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் விபரம்
1வது வார்டு -
வேல்தாய் (அதிமுக)
2வது வார்டு - சுலைகாம்பாள் (அதிமுக)
3வது வார்டு - வேலு
(சுயே)
4வது வார்டு - நல்லமுத்து (சுயே)
5வது வார்டு - கதிரேசன்
(அதிமுக)
6வது வார்டு - பீர்முகமது (சுயே)
7வது வார்டு - கிருஷ்ணபெருமாள்
(திமுக)
8வது வார்டு - ஜமால்முகைதீன் (சுயே)
9வது வார்டு - பீர்முகமது
(சுயே)
10வது வார்டு - நியாஸ் அகமது (சுயே)
11வது வார்டு - ஆமீனாபேகம்
(திமுக)
12வது வார்டு - பஹர்பானு (சுயே)
13வது வார்டு - பாத்திமா
(சுயே)
14வது வார்டு - மாகின் அபுபக்கர் (சுயே)
15வது வார்டு - அயூப்கான்
(திமுக)
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 4 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில்
அதிமுகவும், 8 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி
பெற்றவர்களுக்கு தேர்தல் அலுவலரும், டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரியுமான
பாபுசந்திரசேகரன், உதவி தேர்தல் அலுவலர்கள் இசக்கிபாண்டி, நம்பி சான்றிதழ்கள்
வழங்கினர்.
அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் டவுன் பஞ்.,
தலைவர்கள் உறுதி
தென்காசி : மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என மேலகரம், குற்றாலம், இலஞ்சி, புதூர்,
பண்பொழி, அச்சன்புதூர் டவுன் பஞ்., தலைவர்கள் கூறினர்.மேலகரம் டவுன் பஞ்.,தலைவராக
வெற்றி பெற்ற அதிமுக.,வை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:நான் பெற்ற
வெற்றி முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். அவரின் ஆட்சியில் நலத்திட்டங்கள் அனைத்தும்
ஏழை, எளிய மக்களை சென்றடைகிறது என்பதற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். வரும்
25ம் தேதி பதவியேற்பு விழாவின் போது டவுன் பஞ்., பகுதியில் 1008 மரக்கன்றுகள்
நடப்படும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வார்டுகள் தோறும் மரக்கன்றுகள் நட்டு டவுன்
பஞ்., பகுதியை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றுவேன். அனைத்து மக்களுக்கும் தினசரி
குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பேன். பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்க
நடவடிக்கை எடுப்பேன். தினமும் வாறுகால் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரம் மிகுந்த
பகுதியாக மேலகரம் மாற்றப்படும். டவுன் பஞ்.,சிற்கு ஐ.எஸ்.ஓ.தரச்சான்றிதழ் பெற்று
தருவேன். மொத்தத்தில் தலைசிறந்த டவுன் பஞ்.,பகுதியாக மாற்றி காட்டுவதை லட்சியமாக
கொண்டுள்ளேன்.இவ்வாறு பாலசுப்பிரமணியன்
கூறினார்.
குற்றாலம்
குற்றாலம் சிறப்பு நிலை டவுன் பஞ்.,தலைவராக
வெற்றி பெற்ற லதா கூறியதாவது:மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன். உலக
சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தை இடம் பெற வைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
அவ்வப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய பாடுபடுவேன்.
சுகாதாரம் மிகுந்த பகுதியாக, முன் மாதிரி பகுதியாக குற்றாலத்தை மாற்றிக்
காட்டுவேன்.இவ்வாறு லதா கூறினார்.
இலஞ்சி
இலஞ்சி டவுன் பஞ்.,தலைவராக
வெற்றி பெற்ற காத்தவராயன் கூறியதாவது:இலஞ்சியை தமிழகத்திலேயே முன்மாதிரி டவுன்
பஞ்., பகுதியாக மாற்றி காட்டுவேன். முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் அனைத்து
நலத்திட்ட உதவிகளையும் இலஞ்சி மக்களுக்கு பெற்றுத்தருவேன். குடிநீர் பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
சுகாதார வசதி மேன்மை படுத்தப்படும். தினமும் வாறுகால் சுத்தம் செய்யப்படும்.
அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்ற அனைத்து முயற்சிகளும்
மேற்கொள்வேன். மக்கள் தெரிவிக்கும் குறைபாடுகள் உடனுக்குடன் போக்க நடவடிக்கை
எடுப்பேன். இலஞ்சி டவுன் பஞ்., வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன்.இவ்வாறு
காத்தவராயன் தெரிவித்தார்.
புதூர்
புதூர் டவுன் பஞ்.,தலைவராக வெற்றி
பெற்ற ராதா கூறியதாவது:புதூர் டவுன் பஞ்.,பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக
நிறைவேற்றப்படும். சுகாதாரம் மிகுந்த பகுதியாக மாற்றுவேன். பொதுமக்களின்
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு
விளக்கு வசதி, வாறுகால் வசதியில் தன்னிறைவு பெற்ற பகுதியாக புதூரை மாற்றிக்
காட்டுவேன்.இவ்வாறு ராதா கூறினார்.
அச்சன்புதூர்
அச்சன்புதூர் டவுன்
பஞ்.,தலைவராக வெற்றி பெற்ற டாக்டர் சுசீகரன் கூறியதாவது:அச்சன்புதூர் டவுன்
பஞ்.,பகுதியில் சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி, வாறுகால் வசதி, சாலை வசதி,
குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக
நிறைவேற்றப்படும். நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுகாதாரமாக
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படும். வாறுகால் அடிக்கடி சுத்தம்
செய்யப்பட்டு கொசு மருந்து தெளிக்கப்படும். நலத்திட்டங்கள் அச்சன்புதூர் மக்களுக்கு
பெற்று கொடுப்பதில் உரிய கவனம் செலுத்துவேன். அனைத்து தரப்பு மக்களின்
ஒத்துழைப்போடு எனது பணியை மேற்கொள்வேன்.இவ்வாறு டாக்டர் சுசீகரன்
கூறினார்.
பண்பொழி
பண்பொழி டவுன் பஞ்.,தலைவராக வெற்றி பெற்ற
சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:பண்பொழி டவுன் பஞ்.,சில் குடிநீர் வினியோகம் சீராக
நடக்கும். சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு வசதி தேவையான அளவு அமைத்துக்
கொடுக்கப்படும். அனைத்து சமுதாய மக்களுக்கும் சாதி, மத வேறுபாடின்றி உதவி செய்வேன்.
முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டங்கள் பண்பொழி மக்களுக்கு பெற்றுத் தருவதில்
முதல் ஆளாக செயல்படுவேன். மக்களின் வாழ்க்கை முன்னேற தேனையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுப்பேன்.இவ்வாறு சங்கரசுப்பிரமணியன் தெரிவித்தார்.
http://www.dinamalar.com/district_detail.asp?id=336341