Posted by Haja Mohideen
(Hajas) on 11/1/2011
|
|||
களக்காடு மலையில் மழை: அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து களக்காடு, அக். 30: களக்காடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதையடுத்து, செங்கல்தேரி பச்சையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைப் பகுதியில் உள்ள செங்கல்தேரி சிற்றருவி, கருங்கல்கசம் அருவி, முதலிருப்பான் சிற்றருவி, குளிராட்டி அருவி, தேங்காய் உருளி அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தலையணை, கோழிக்கால் பச்சையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தலையணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு பச்சையாறு, உப்பாறு, நான்குனேரியன் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 26 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல மலையடிவாரத்தில் உள்ள பாசனக்குளங்களுக்குத் தண்ணீர் செல்கிறது. திருக்குறுங்குடி பெரியகுளம் பாதியளவு நிரம்பியுள்ளது. மழையினால் மலையடிவார நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=499791&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=களக்காடு மலையில் மழை: அருவிகள், நீரோடைகளில் நீர்வரத்து
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |