Posted by Haja Mohideen
(Hajas) on 11/4/2011
|
|||
அடித்து ஊற்றிய கனமழை சென்னை ஸ்தம்பித்ததுவீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அச்சம் [IST] சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப்பருவமைழையின் தீவிரம் காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது. காலையில் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை காலை 9 மணி முதல் மீண்டும் தொடங்கியது. தொடர் மழைகாரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் சிரமத்திக்குள்ளாகினர். போக்குவரத்து பாதிப்பு மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. கீழ்ப்பாக்கம், கிண்டி, வடபழனி ஆகிய இடங்களில் காலை முதல் பெய்து வரும் கனமழையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் அபாயம் மழை காரணமாக வடசென்னைபகுதி முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. வியாசர்பாடி, வியாசர்புரம், கணேசாபுரம் பகுதிகளில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
English summary Heavy rain overnight inundated many roads in the city and suburbs, and brought rush hour traffic to a standstill on many arterial roads. Heavy rainfall accompanied by thunder that lashed the city had left many interior roads water-logged. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |