Posted by Haja Mohideen
(Hajas) on 11/5/2011
|
|||
இன்று பெட்ரோல்... நாளை அத்தியாவசிய பொருட்கள் கிர்ர்... : மீளாத்துயரமே மக்கள் நிலை! நவம்பர் 04,2011,23:52 IST பெட்ரோல் விலை பத்து முறை ஏறியதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிர்ரென ஏறும் நிலை உருவாகும் என்பதால், நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் வயிற்றில் தற்போதே "புளி'யை கரைக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ராமநாதபுரத்தில் 71.22 ரூபாய்க்கு விற்ற சாதா பெட்ரோல் 73.12 ரூபாய்க்கும், 73.98க்கு விற்ற பவர் பெட்ரோல், 75.89 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது.
பொதுமக்கள் கருத்து
சே.பமீலா,(குடும்ப தலைவி, ராமநாதபுரம்) : ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பெட்ரோல் விலையை ஏற்றுகின்றனர். தொடர் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்ததால், பொதுமக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை என்பதையே காட்டுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால், பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், மேலும் அவதிக்குள்ளாகின்றனர். பெட்ரோல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றுவதற்கான முதற்படியாக உள்ளது.
குளோரிடா (ஆசிரியர், ராமநாதபுரம்): இரு சக்கர வாகனம் என்பது இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அடிக்கடி பெட்ரோல் விலை உயர்வால், இனி வாகனங்களை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது. முடிந்த வரை கடைகளுக்கு நடந்தே செல்ல வேண்டும். விலை உயர்வுக்கு, இதுபோன்ற சிக்கன நடவடிக்கையில் இறங்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
சிவா, (ஆட்டோ டிரைவர், ராமேஸ்வரம்): பெட்ரோல் விலை அதிகரிக்க சவாரி கட்டணத்தையும் கூட்டவேண்டிய நிலை உள்ளது. இப்போது வாங்கும் கட்டணமே அதிகம் என்று மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றத்தால் தினமும் சண்டைபோடும் நிலை ஏற்படும். யாரோ பெட்ரோல் விலையை உயர்த்த, நாங்கள் மக்களிடம் பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோதிராஜ் (அச்சக உரிமையாளர், முதுகுளத்தூர்): அரசு கட்டுபாட்டில் இருந்த விலை நிர்ணயம், தற்போது எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் மாதம் ஒருமுறை விலை உயர்ந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. விலை உயர்வால் பழையபடி சைக்கிள்களில் செல்லும் நிலை ஏற்படும்.
முரளி(வியாபாரி, பரமக்குடி): தொடர்ந்து ஏறி வரும் பெட்ரோல் விலை உயர்வால் எதிர்கால சேமிப்புக்கு வழி இல்லாமல் சென்று கொண்டுள்ளது. இதனால், மறைமுக விலை ஏற்றம் ஏற்படுகிறது. மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் விலை ஏற்றம் தொடர்பாக தகராறுகள் ஏற்படும்.
சிவகங்கை:மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதோடு, நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
மக்களின் கருத்து:
எம்.பிரபு: லாரி டிரைவர்,சிவகங்கை: பெட்ரோல் விலை உயர்வு, லாரி உரிமையாளர்களை மறைமுகமாகவும்,பொதுமக்களை நேரடியாகவும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணரவில்லை. விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அதனை தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் உயரும்.
எம். அரவிந்தன்: வேன் டிரைவர், சிவகங்கை: மத்திய அரசு பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என தெரிவிக்கின்றனர். பெட்ரோல் விலை உயர்வால் பெட்ரோல் சம்பந்தமான பொருட்களின் விலையும் உயரும். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்., கட்சிக்கு வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.
எஸ்.முத்துமணி: டூவீலர் ஓட்டுனர்: இந்த ஆண்டில் மத்திய அரசு பல முறை உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வதால் நடுத்தர வர்க்கத்தினர் இனி சைக்கிளை பயன்படுத்த வேண்டியது தான்.
பார்கவி,கல்லூரி மாணவி: தினமும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் கல்லூரிக்கு சென்று வரலாம். இனி கூடுதல் செலவு பெற்றோருக்கு ஏற்படுத்தும். பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ, கார் வாடகை அதிகரிக்கும்.நடுத்தர வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
மதுரை:காலை பரபரப்பில் சுழன்று, இரவில் "அப்பாடா' என கண் அயர்வதற்குள், "நள்ளிரவு பெட்ரோல் விலை உயர்வு' என்ற அறிவிப்பு தூக்கத்தை விரட்டி விடுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதாக கூறி, அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தரவர்க்கத்தினர் தான். இந்த விலை உயர்வை காரணம் காட்டி அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி விடுகின்றனர். லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தியதாக கூறினாலும், மாதத்திற்கு ரூ.200 செலவு கூடிவிடும். இதை யார் ஈடுகட்டுவது? நிர்ணயித்த சம்பளத்தில், திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும், நடுத்தர வர்க்கத்தினர் பாவம் செய்தவர்களா என மதுரை வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.
கே.மாலதி, குடும்பத்தலைவி, முனிச்சாலை: மூன்று மாதங்களாக "டூவீலர்' ஓட்டுகிறேன். மார்க்கெட், மருத்துவமனை, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல "டூவீலர்' அவசியம். ரூ.100 க்கு பெட்ரோல் ஊற்றினால், ஒன்றரை நாளுக்குள் காலியாகி விடுகிறது. அத்தியாவசிய இடங்களுக்கு வாகனம் இல்லாமல், செல்ல முடியாது. பெட்ரோலுக்கு அதிக செலவாவதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.
எம்.செல்வமுத்துக்குமார், விற்பனை பிரதிநிதி, சிம்மக்கல்: ஒரு நாளைக்கு 50 முதல் 75 கி.மீ., தூரம் பைக்கில் சுற்றுகிறேன். பைக் லிட்டருக்கு 60 கி.மீ., "மைலேஜ்' தருகிறது. மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டும் "பெட்ரோல் அலவன்ஸ்' தருகின்றனர். இப்படி திடீரென விலை உயரும் போது, சம்பளத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை விலை உயரும் போதும், "ஏன் பைக் வாங்கினோம்' என எண்ண தோன்றுகிறது.
கே.அண்ணாதுரை, ஆட்டோ டிரைவர், பழங்காநத்தம்: மூன்றாண்டுகளாக சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறேன். லிட்டருக்கு 25 கி.மீ., ஆட்டோ மைலேஜ் தருகிறது. பெட்ரோல் விலை உயர்வால், பாதிக்கப்படுவது நாங்கள் தான். பயணிகளிடம், கூடுதலாக ரூ.ஐந்து கேட்டால், "ஷேர் ஆட்டோ' சவாரிக்கு சென்று விடுகின்றனர். வண்டியை அப்படியே வைத்திருக்கவும் முடியாது. குடும்பத்தை "ஓட்ட' வேண்டும் என்பதற்காக, ஆட்டோவை "ஓட்ட' வேண்டியுள்ளது.
கே.மாதவஆனந்த், பொறியாளர், தனியார் நிறுவனம், சர்வேயர் காலனி: சொகுசாக பயணம் செய்து பழகி விட்டதால், விலை உயர்வால் காரை நிறுத்திவிட்டு, "டூவீலர்' ஓட்ட முடியாது. தினமும் அலுவலகம் செல்ல கார் அவசியம். லிட்டருக்கு 18கி.மீ., கார் "மைலேஜ்' தருகிறது. பெட்ரோலுக்கு ஒரு நாளைக்கு, அதிகம் செலவிட வேண்டியுள்ளது. கவுரவம் பார்க்காமல், இனி "கால் டாக்ஸி' அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது தான். "டீசல்' காருக்கு மாறலாமா? என யோசிக்கிறேன்.
எஸ்.உமாமகேஸ்வரி, குடும்பத்தலைவி, காந்திமியூசியம் ரோடு: வீட்டிலிருந்து ரேஷன் கடை, பள்ளி, மார்க்கெட் தூரத்தில் உள்ளன. "டூவீலர்' இன்றி வெளியில் செல்ல முடியாது. பஸ்சை நம்பி, காத்திருக்க முடியாது. ஆட்டோவில் சென்றால், அதிகம் செலவாகும். பெட்ரோல் விலை உயர்வால், நடுத்தர வர்க்கத்தினர், புலம்புவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
கோவை: மீண்டும் ஒரு முறை, பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டது மத்திய அரசு.
வேதனைப்படுவதை தவிர, வேறு வழியில்லாத நிலையில் இருக்கும் மக்கள், இரு தலைக்கொள்ளி
எறும்பாய் தவிக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, லிட்டருக்கு 72 ரூபாய் 88 காசுகள்
என்ற விலையில் விற்கிறது பெட்ரோல். செப்.,16ல் லிட்டருக்கு மூன்று ரூபாய் 14
காசுகள் உயர்த்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், "ஏதோ பிழைத்துப்போகட்டும்' என்று
விட்டு வைத்ததைப்போல, இப்போது லிட்டருக்கு ஒரு ரூபாய் 82 காசுகள்
உயர்த்தியிருக்கின்றனர். இந்த விலை உயர்வு பற்றி, மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று
அறிய முற்பட்டோம். வேதனை, விரக்தி, இயலாமை, கொந்தளிப்பு என பலரும், தங்களது
மன
டாடாபாத், சுப்ரமணியம்: பெட்ரோல் விலை உயர்வால், அடிப்படையில் அனைத்து பொருட்களின் விலையும் தானாகவே உயரும் வாய்ப்பு ஏற்படுகிறது. பிச்சைக்காரர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர்.
காந்திபுரம், சுரேஷ்குமார்: நான் கம்பெனி பிரதிநிதியாக இருக்கிறேன். "டூ வீலர்' எனக்கு மிகவும் முக்கியம். தினமும் 150 கி.மீ.,வரை சுற்றி வருகிறேன். பெட்ரோல் விலை குறைந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். "லிட்டருக்கு ரூ.2 ஏறிவிட்டது' என்று கூறியதும், வழக்கம் போல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன செய்வது, வேதனைப்படுவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லையே?
கணபதி, அர்த்தநாரி: பைக் ஓட்டுவதற்கே இஷ்டமில்லாமல் இருக்கிறது. ரூ.150க்கு பெட்ரோலுடன் ஆயில் போட்டால், மூன்று நாட்கள் ஓட்டிக்கொண்டிருந்த எனக்கு, இப்போதெல்லாம் இரண்டு நாட்கள் மட்டுமே ஓட்ட முடிகிறது. இந்த நிலையில் மீண்டும் விலையேற்றம் வேறு. இனிமேல் முக்கிய இடத்துக்கு மட்டுமே இரு சக்கர வாகனத்தில் செல்வது என்று முடிவெடுத்து விட்டேன்.
பீளமேடு, பாரதிமணி: மத்திய அரசு, பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தனியாரிடம் வழங்கியதன் விளைவு தான், தங்கள் இஷ்டப்படி நினைத்த நேரத்தில் விலையை ஏற்றி விடுகின்றனர். இந்தியா வல்லரசு இல்லை. ஆனாலும் பல வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளி வழங்குகிறது. அதையெல்லாம் தவிர்த்து, பெட்ரோல் விலையை குறைக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்யலாம்.
செல்வபுரம், மாசானதுரை: அடிக்கடி பெட்ரோல் விலை உயர்வால் அடித்தட்டு
மக்கள் அதிகம் பாதிக்கின்றனர். கடந்தாண்டு ரூ.47க்கு விற்ற பெட்ரோல், ஒரு
ஆண்டுக்குள் ரூ.72.88 ஆக உயர்ந்துள்ளது பெரிய அதிர்ச்சியளிக்கிறது. டூவீலரை விற்று,
சைக்கிள் வாங்கி பயணம் செல்ல முயற்சிக்கிறேன். சைக்கிள் என் றால் செலவில்லை;
உட
டவுன்ஹால், மகேஷ் சங்கர்: பெட்ரோல் விலை உயர்வு, பெரிய பிரச்னையாக இருக்கிறது. ரூ.200க்கு பெட்ரோல் போட்டால் ஒரு வாரத்துக்கு வண்டி ஓட்ட முடியும். இப்போது மூன்றரை நாட்கள் மட்டுமே ஓட்ட முடிகிறது. மாதத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட காலம் முடிந்து விட்டது. இப்போது ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்த 500 ரூபாய்க்கு எங்கே போவது?
அன்சாரி நகர், மேகலா: இரண்டு மாதத்துக்கு ஒரு முறை விலை ஏற்றுவது வாடிக்கையாக போனால், அனைத்து பொருட்களுமே விலை ஏறிக்கொண்டேதான் போகும். இதுவே அதிகம். இதற்கு மேல் விலையை ஏற்றிக்கொண்டு போனால் தாங்கமுடியாது. காஸ் சிலிண்டர், டீசல், மண்ணெண்ணெய் உட்பட பல பொருட்களின் விலைகள் தானாகவே உயரும் நிலை உருவாகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பெரிய போராட்டம் நடத்த வேண்டும்.
ரங்கே கவுடர் வீதி, சங்க்கி பண்டாரி: பெட்ரோல் விலை உயர்வு என்பது அதற்கு மட்டுமல்லாது, ஆட்டோ கட்டணம், ஸ்கூல் வேன் கட்டணம், பால், ஓட்டல்களில் உணவு பண்டங்கள் உட்பட அனைத்து விலை உயர்வுக்கு காரணமாகி விடுகிறது. சாதாரண நிலை மக்களுக்கு தான் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
நேரு நகர்-ராம்நகர், பாரதி: பெட்ரோல் விலை அதிகரிப்பு ரூ.1.82 என்று தனியாக கூறும் போது எளிதாக காணப்படலாம். ஆனால் ரூ.73 என்று கூறும் போதுதான் அதன் நிலை புரியும். நடுத்தர மக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும். அடிக்கடி பெட்ரோல் விலை உயருவது போல், வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளமும் உயர்ந்து கொண்டே சென்றால் வசதியாக இருக்கும்.
கிராஸ்கட் ரோடு அழகம்மை: மத்திய அரசு கைவிட்டதால், பெட்ரோல் நிறுவனத்தார் எப்படி வேண்டுமானாலும் விலையை ஏற்றிக்கொண்டே செல்கின்றனர். டூ வீலரை நம்பித்தானே நகருக்கு வெளியே வீடுகட்டி குடியிருக்கவும் செல்கின்றனர். ஜப்பானை போல் சைக்கிளை பயன்படுத்தினால் தான் பிரச்னைக்கு தீர்வு காணலாம். உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாக அமையும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |