Posted by Haja Mohideen
(Hajas) on 11/8/2011
|
|||
களக்காட்டில் இடிந்து விழுந்த தர்கா கட்டடம்: எம்எல்ஏ பார்வையிட்டார் First Published : 07 Nov 2011 02:17:09 PM IST களக்காடு, நவ. 6:÷களக்காட்டில் மழையால் இடிந்து விழுந்த தர்கா கட்டடத்தை நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. நாராயணன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். களக்காடு கோயில்பத்து பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த தர்கா கட்டடம் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டடத்தை நான்குனேரி எம்எல்ஏ ஏ. நாராயணன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். காயமடைந்த சிறுவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணைச்செயலர் இளஞ்சேரன், களக்காடு ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜோ. ராஜசேகர், பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர் அகமது ரஹ்மத் அலி உள்ளிட்டோர் சென்றனர். http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Thirunelveli&artid=503196&SectionID=139&MainSectionID=139&SEO=&Title=களக்காட்டில் இடிந்து விழுந்த தர்கா கட்டடம்: எம்எல்ஏ பார்வையிட்டார்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |