Posted by Haja Mohideen
(Hajas) on 11/8/2011
|
|||
கூடங்குளத்தில் மத்திய நிபுணர் குழு ஆய்வு First Published : 09 Nov 2011 09:22:23 AM IST திருநெல்வேலி, நவ.8: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் மத்திய, மாநிலக் குழுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணி அளவில் அணுஉலை அமைந்துள்ள கூடங்குளத்துக்கு மத்திய நிபுணர் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். மாலை 4.30 மணிக்கு அணு உலைக்குச் சென்ற அவர்களை அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இரவு 8.30 மணிவரை அணுமின் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வளாகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் குழு உறுப்பினர்கள் 10 பேரும் சென்று பார்வையிட்டனர். அணுமின் நிலைய செயல்பாடுகள் குறித்து வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி, நிலைய இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், திட்ட இயக்குநர் பானர்ஜி ஆகியோர் விளக்கிக் கூறினர். 3 நாள்கள் ஆய்வு: வளாகத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய நிபுணர் குழு தலைவர் முத்துநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது: அணுஉலை வளாகத்தை முழுமையாகப் பார்வையிடவில்லை. ஒருசில பகுதிகளைத்தான் பார்வையிட்டோம். மீண்டும் அணுஉலையைப் பார்வையிட இருக்கிறோம். நவம்பர் 15 முதல் 17-ம் தேதிவரை நிபுணர் குழு உறுப்பினர்கள் 15 பேரும் வந்து பார்வையிட உள்ளோம். இப்போது பார்த்த அளவில் திருப்தியா இல்லையா என்று கூற முடியாது. முழு அளவில் ஆராய்ந்த பிறகே மத்திய அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று கூறினார். பின்னர் நிபுணர் குழு உறுப்பினர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கூடங்குளத்தில் நவம்பர் 15 முதல் 3 நாள்கள் ஆய்வை முடித்த பிறகு, நவம்பர் 18 அல்லது 19-ம் தேதி மாநிலக் குழுவுடன் 2-வது கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய குழு நடத்தும் எனத் தெரிகிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |