Posted by Haja Mohideen
(Hajas) on 11/10/2011
|
|||
துபாயில் நெல்லை ஏர்வாடி முஸ்லிம் சங்க பெருநாள் கூட்டம் துபாய் : நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சார்ந்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் ( Eruvadi muslim Association - EMAN) என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பாக பெருநாள் கூட்டம் துபையில் உள்ள கல்ப் மாடல் பள்ளியில் கடந்த 6.11.2011 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் பொருளாளர் BK.முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். ஆரம்பமாக ஆய்ஷா நமீரா என்ற 7 வயது சிறுமி குர்ஆன் ஓதினார். பின்னர் ஈமான் கடந்து வந்த பாதையைப் பற்றி செயலாளர் இப்ராஹிம், ஈமானின் எதிர்காலத்திட்டங்கள் என்ற தலைப்பில் துணைத்தலைவர் பீர் முஹம்மத் மற்றும் ஏர்வாடியில் ஈமான் ஆற்றி வரும் பணிகள் பற்றி ஆலோசனைக்குழு உறுப்பினர் அல்தாப் ஆகியோர் உரையாற்றினார்கள். பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முஹைதீன் பாட்சா வளைகுடாவில் மக்கள் சந்திக்கும் உளவியல் பிரச்னைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக சிறப்புரை ஆற்றினார். இந்த உரையில் தலைப்பு சம்பந்தமாக பல அருமையான ஆலோசனைகளை அவர் வழங்கினார். பின்னர் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். முஹைதீன் பாட்சா அமீரகத்தில் உள்ள ஈடிஏ அஸ்கான் குழுமத்தில் ஊழியர் நலத்துறை மேலாளராக செயலாற்றி வருகிறார்கள். தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி செயலாளர் காதர்ஷா வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு பொறியியல் படிப்புகள் குறித்த விவரத்தினை வழங்கினார். அதன் பின் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஜலால் பரிசு வழங்கினார். முஹைதீன் பாட்சாவுக்கு நினைவுப் பரிசினை ஈமான் சங்கத்தின் சார்பில் அதன் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஷாபி மற்றும் முஹம்மது அலி ஆகியோர் அளித்தனர். இறுதியாக ஹஸன் என்ற 9 வயது சிறுவன் நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=2011_EID_Function http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=2011_EID_Kids Muduvai Hidayath" <muduvaihidayath@gmail.com> |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |