Posted by S Peer Mohamed
(peer) on 11/13/2011
|
|||
ஈமான் சார்பாக ஹஜ் பெருநாளை முன்னிட்டு மீண்டும் ஒரு மதினாவை நோக்கி என்ற தலைப்பில் ஏர்வாடியை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய கட்டுரைப் போட்டியை அறிவித்திருந்தோம். குறைந்த தின அவகாசமே இருந்த போதிலும் 9 சகோதர சகோதரிகள் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர். பங்கு பெற்ற அனைவருக்கும் ஈமான் சார்பாக எங்களது இதயம் கனிந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் அறிவு மென்மேலும் அனைத்து மக்களுக்கும் பயன்படவேண்டும் என துஆ செய்கிறோம். அனைத்துக் கட்டுரைகளும் ஏர்வாடியின் பிரச்னைகளையும் அதனை தீர்ப்பதற்கான ஏராளமான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் குறி்ப்பிட்டிருந்தன. அல்ஹம்துலில்லாஹ். இதில் முதல் மூன்று இடங்களையும் தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. யார் எழுதியது என்ற விபரம் தேர்வுக் குழுவுக்கு தெரிவிக்கப்படாமல் அனைத்துக் கட்டுரைகளுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஈமான் பொருளாளர் BK.முஹ்யித்தீன், ஆலோசனைக்குழு உறுப்பினர் அல்தாப் மற்றும் ஈமான் உறுப்பினர் சாதிக் அலி ஆகியோர் அடங்கிய இந்தக்குழு அனைத்துக் கட்டுரைகளையும் நன்கு பரிசீலனை செய்தது. கட்டுரை நடை, ஏர்வாடி சம்பந்தமான கருத்துக்கள், புதிய சிந்தனைகள் என்று பிரித்து மதிப்பெண்கள் அளித்து முதல் 3 இடம் பெற்ற கட்டுரைகளை தேர்வு செய்தனர். மூன்றாம் பரிசுக்கு இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஈமான் சார்பாக நடைபெற்ற பெருநாள் கூட்டத்தில் பொதக்குடியைச் சார்ந்த சகோதரர் ஜலாலுதீன் ( உணர்வாய் உன்னை, அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சிகளை நடத்துபவர்) பரிசு பெற்றவர்களின் விபரங்களை அறிவித்தார். பரிசு பெற்றவர்கள் விபரம் வருமாறு முதல் பரிசு சகோதரி அனிஸா
சகோதரி அஹமத் பாத்திமா மூன்றாம் பரிசு சகோதரர் ஜமால் சகோதரர் பரீத் அஹமத்
கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவார்ந்த கருத்துக்களை நடைமுறைப்படுத்த அல்லாஹ்வின் அருளால் ஈமான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். என்னென்றும் அன்புடன் ஈமான் - அமீரகம் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |