Posted by Haja Mohideen
(Hajas) on 11/19/2011
|
|||
வள்ளியூரில் இலவச மருத்துவ முகாம் நவம்பர் 18,2011,00:47 IST வள்ளியூர் : வள்ளியூரில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வள்ளியூர் முத்துவேலர் அமராவதி டிரஸ்ட், வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மகாத்மா காந்தி புதிய இந்தியா அறக்கட்டளை, நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை பரிசோதனை இலவச மருத்துவ முகாமை வள்ளியூர் நாலந்தா மெட்ரிக் பள்ளியில் நடத்தியது. "சங்கடமான சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி சந்தோஷமாய் வாழ்வது எப்படி' என்ற பொருளில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு வள்ளியூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் குமரமுருகன் தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க தலைவர் பி.டி.பி.சின்னத்துரை முன்னிலை வகித்தார். கருத்தரங்கை கிங்ஸ் பள்ளி தாளாளரும், ரோட்டரி தொழில்துறை சேவை சேர்மனுமாகிய நவமணி துவக்கி வைத்தார். டாக்டர் சங்கரன் சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், பின்விளைவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். நோயாளிகளின் சந்தேகங்களுக்கு விடையளித்தார். முகாமில் 200 பேருக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 130 பேர் சர்க்கரை நோயாளிகள் மற்றும் 5 பேருக்கு புதியதாக சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 15 பேருக்கு கண் விழித்திரை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வள்ளியூர் அமராவதி டிரஸ்ட் நிறுவனர் பார்வதி சங்கரன், வள்ளியூர் ரோட்டரி சங்க செயலர் முருகன், மகாத்மா காந்தி புதிய இந்தியா அறக்கட்டளை அன்னை அமராவதி ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் நேரு நர்சிங் ஆசிரியை மேபல், மாணவிகள் செய்திருந்தனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |