Posted by Haja Mohideen
(Hajas) on 11/26/2011
|
|||
ரத்த பரிசோதனைக் கூடங்கள், கட்டணத்தில் பாதி டாக்டர்களுக்கு கமிஷன் -எஸ்.ராமசாமி- கொஞ்சம் பணமும், சிறிய இடமும் இருந்தால் போதும், ரத்தப் பரிசோதனைக் கூடத்தை துவக்கி விடலாம் என்பது தான், தமிழகம் முழுவதும் உள்ள இன்றைய நிலை. இதில் வேடிக்கை என்னவென்றால், பெட்டிக் கடை வைப்பதற்கு கூட, மாநகராட்சி, நகராட்சிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பரிசோதனைக் கூடங்களுக்கு அந்த அவசியமே இல்லை. கட்டணங்களை பொறுத்தவரையில், பாதி கட்டணத்தை, டாக்டர்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டியுள்ளது. அப்போது தான் அவர்கள், எங்களிடம் பரிசோதிக்க பரிந்துரைப்பர்,'' என்றார் போலி பயிற்சி நிலையங்கள் லேப் டெக்னீஷியன் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை நடத்துவதாக குறிப்பிட்டு, பொது இடங்களில் ஆங்காங்கே, போலி பயிற்சி பள்ளிகளின் விளம்பரங்கள் தென்படுகின்றன. இதுகுறித்து பேசிய, தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புணர் சங்க பொதுச் செயலர் சுகுமார், ""பயிற்சி நிறுவனங்களை நடத்த, அரசு அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலையங்கள், அங்கீகாரம் பெற்றுள்ளனவா என்பது யாருக்கும் தெரியாது. பயிற்சி நிறுவனங்களில் பணம் கொடுத்து, சான்றிதழ் பெற்று, பரிசோதனைக் கூடம் அமைப்பவர்களும் உண்டு,'' என்றார்.மேலும், ""இதையெல்லாம் ஆய்வு செய்ய, எந்த அமைப்பும் இல்லை. பரிசோதனைக் கூடங்களை முறைப்படுத்த, மாநில கவுன்சில் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை,'' என்றார். சான்று மட்டும் போதும் மதுரையில், தனியார் பயிற்சி நிலையத்தில் பயின்று, தற்போது பரிசோதனை மையம் நிறுவியுள்ள ஒருவர் இதுகுறித்து கூறியதாவது: தனியார் பயிற்சி மையங்கள், அங்கீகாரம் பெற்றதா, இல்லையா என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. தொழில்நுட்ப தகுதி கிடைத்தால் போதும் என நினைத்து, அதில் சேர்ந்தேன்.தற்போது, தனியாக பரிசோதனை மையம் நிறுவியுள்ளேன். இதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை; பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.டாக்டரின் தயவில் தான், நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம். இதனால், டாக்டருக்கு கமிஷன் கொடுப்பதை தவிர்க்க முடியாது.மதுரையில், பரிசோதனை மைய உரிமையாளர்கள், சங்கம் வைத்துள்ளனர். அவர்கள், டாக்டர்களுக்கு, 50 சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுக்க கூடாது என, தீர்மானித்துள்ளனர்.இவ்வாறு சுரேஷ் கூறினார். சட்டம் இல்லைஇதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் வசம்சதாரா கூறும்போது, ""பரிசோதனை மையங்களுக்கு அங்கீகாரம் அளிக்க, தேசிய அளவில் அங்கீகாரக் குழு உள்ளது. ஆனால், இக்குழுவில் அங்கீகாரம் பெற்று தான், பரிசோதனை மையம் நிறுவ வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை. தேசிய அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்கள், சிறந்த மையங்களாக கருதப்படுகின்றன, அவ்வளவு தான். பரிசோதனை மையங்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த தற்போது, எந்த விதியும் இல்லை,'' என்றார். பதிவு செய்வது இல்லை தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், ரத்த பரிசோதனைக் கூடங்கள் ஆகியவை, மாநகராட்சியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் கூறும்போது, ""மருத்துவமனைகள் பெரும்பாலும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், பரிசோதனைக் கூடங்களை பொறுத்தவரை, இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை,'' என்றார்.
http://www.dinamalar.com/News_detail_ban_exclu.asp?Id=356127 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |