Posted by Haja Mohideen
(Hajas) on 11/28/2011
|
|||
திருக்குறுங்குடி பெரியகுளத்தில் "மெகா சைஸ்' பள்ளம் :பொதுமக்கள் பீதி நவம்பர் 28,2011,01:56 IST களக்காடு : திருக்குறுங்குடி பெரியகுளத்தில் நேற்று இரவு திடீரென மெகா சைஸ் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். திருக்குறுங்குடி பெரிய குளத்தின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் பெரியகுளம் நிரம்பியது. நேற்று முன்தினம் குளத்தின் வடக்குமடை ரோட்டின் சிறிய பள்ளம் விழுந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் குளத்திற்கு நேரில் சென்று பள்ளத்தை அடைத்தனர். மேலும் குளத்திற்கு வரக்கூடிய தண்ணீரை நம்பியாற்றில் திருப்பி விட்டதோடு, குளத்தில் தேங்கிய தண்ணீர் மறுகால் பாய்ந்ததாலும் குளம் உடையும் அபாயம் நீங்கியது. இதற்கிடையே நேற்று இரவு பெரிய குளத்தின் நடுமடை பகுதிரோட்டில் பெரிய பள்ளம் விழுந்தது. இதனையறிந்த விவசாயிகள், உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் திருக்குறுங்குடி வழியாக செல்லக்கூடிய பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த டவுன் பஞ்., தலைவர் நம்பிராஜா, சேரன்மகாதேவி ஆர்டிஓ., ராஜகிருபாகரன், நான்குநேரி தாசில்தார் கதிரேசன், களக்காடு பஞ்., யூனியன் சேர்மன் ஜார்ஜ் கோசல், பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் ஜவகர்,நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனையப்பன், உதவி பொறியாளர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆலோசனை நடத்தியதோடு, மணல் மூடைகளை கொண்டு பள்ளத்தை அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரியகுளத்தில் மெகா சைஸ் பள்ளம் விழுந்துள்ளதால், குளம் எந்தநேரமும் உடைந்து விடுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். http://www.dinamalar.com/district_detail.asp?id=357607 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |