Posted by Haja Mohideen
(Hajas) on 12/3/2011
|
|||
வள்ளியூரில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் "அபேஸ்' டிசம்பர் 03,2011,04:03 IST வள்ளியூர்:வள்ளியூரில் வங்கியில் பணம் எடுத்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் இருந்து நூதன முறையில் 20 ஆயிரம் ரூபாயை "அபேஸ்' செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இடிந்தகரையை சேர்ந்தவர் குரூஸ் இருதயம் (75). இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் தனது பென்ஷன் தொகையை எடுப்பதற்காக வள்ளியூரில் உள்ள பாங்கிற்கு வந்துள்ளார். அங்கு பணம் எடுத்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் இவரிடம் நைசாகி பேச்சு கொடுத்துள்ளார். அதன்பின் குரூஸ் இருதயம் பாங்கிலிருந்து ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அந்த மர்ம நபர் அவரிடம் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பழைய பஸ்ஸ்டாண்ட் வரை போக வேண்டியதிருப்பதாக தெரிவித்துள்ளார்.உடனே அந்த மர்ம நபர் அவரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். போகும்போது அவரிடம் எனது வீட்டில் காலண்டர் இருக்கிறது உங்களுக்கு வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கலையரங்க தெருவில் சென்ற மர்ம நபர் அங்குள்ள ஒரு வீட்டின் முன் பைக்கை நிறுத்திக் கொண்டு காலண்டர் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, உங்களிடம் உள்ள 20 ஆயிரம் ரூபாய் 100 ரூபாய் கட்டாக உள்ளது. அதனை நான் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக தருகிறேன் என்று கூறியுள்ளார்.உடனே குரூஸ் இருதயமும் அவரிடம் பணத்தை கொடுத்தபோது மர்ம நபர் பறித்துக் கொண்டு பைக்கில் தப்பியோடிவிட்டார். தான் ஏமாந்தது குறித்து குரூஸ் இருதயம் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். புகார் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பைக்கில் வந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |