Posted by Haja Mohideen
(Hajas) on 12/4/2011
|
|||
“இன்னமும் சில நிமிடங்களில் எமது ரகசியம் சிக்கிக் கொள்ளப் போகிறது” Saturday 03 December 2011, 10:05 GMT Tyre, Lebanon: The Israeli army yesterday (Friday) detonated an espionage device in southern lebanon that had been monitoring a communications network, Shiite militant group Hezbollah said.A Hezbollah official in southern lebanon told “The Israeli army today detonated an espionage apparatus latched onto a communications network between the villages of Srifa and Deir Kifa by drone after the Islamic resistance (Hezbollah) succeeded in uncovering the device.”ஜேம்ஸ்-பாண்ட் திரைப்படங்களில் வருவதுபோன்ற சுவாரசியமான ரகசிய ஆபரேஷன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெற்கு லெபனானில் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் நேற்று தமது (லெபனான்) நாட்டுக்குள் ரகசியமாக இயக்கிய உளவு பார்க்க வைத்திருந்த கருவி ஒன்றை அழித்து விட்டுச் சென்றிருப்பதாக ஹிஸ்பொல்லா அமைப்பு கூறியுள்ளது. இவர்கள் குறிப்பிடும் உளவு பார்க்கும் கருவி, இஸ்ரேலுக்குச் சொந்தமானதுதான். லெபனானுக்கே தெரியாமல், லெபனானுக்குள் இஸ்ரேலிய உளவுத்துறையால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பதே குற்றச்சாட்டு. கருவி இயங்கும் விஷயத்தை லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பு கண்டுபிடித்து அணுகுமுன், இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்று வந்து, கருவியை குண்டுவீசி அழித்துவிட்டு சென்றிருக்கிறது. இந்த அதிரடிச் சம்பவத்தின் பின்னணி என்ன? தெற்கு லெபனானில் தமக்கு தெரியாமலேயே ஒரு கம்யூனிகேஷன் நெட்வேர்க் இயங்கி வருவதை ஹிஸ்பொல்லா அமைப்பின் உளவுத்துறை கண்டுபிடித்திருக்கின்றது. அந்த நெட்வேர்க், லெபனானின் தென்பகுதியில், ஸ்ரிஃபா, டெய்ர்-கிஃபா ஆகிய இரு கிராமங்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு இடத்திலுள்ள கருவியால் கன்ட்ரோல் பண்ணப்படுகின்றது என்பதையும் ஹிஸ்பொல்லா உளவுத்துறை தமது சிக்னல் டிட்டெக்டர்கள் மூலம் கண்டு பிடித்தனர். இந்த இரு கிராமங்களுக்கும் இடையே ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அதற்குள் எங்கேயோதான் இந்தக் கருவி இருந்து இயங்க வேண்டும் என்று புரிந்துகொண்ட ஹிஸ்பொல்லா, தமது போராளிகளை காட்டுப் பகுதிக்குள் நேற்றுக் காலையில் அனுப்பி வைத்தது. அங்கே தேடுதல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டார்கள். காட்டுக்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஹிஸ்பொல்லா ஆட்கள் தமக்கிடையே வாக்கி-டாக்கி மூலம் பேசிக்கொண்ட சிக்னல்களை, காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உளவு பார்க்கும் கருவி ரிசீவ் பண்ணிக் கொண்டது. அந்தக் கருவியை இஸ்ரேலில் இருந்து மானிட்டர் பண்ணிக்கொண்டிருந்த இஸ்ரேலிய உளவுத்துறையினர், தமது உளவு பார்க்கும் கருவியை ஹிஸ்பொல்லா நெருங்கி விட்டது என்பதைப் புரிந்து கொண்டனர். ஹிஸ்பொல்லாவிடம் தமது கருவி அகப்படுவதை தவிர்க்க, அதை அழித்துவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று புரிந்துகொண்ட அவர்கள், இஸ்ரேலிய ராணுவத்துக்கு அறிவிக்க, அவர்கள் தமது ஆளற்ற உளவு விமானம் ஒன்றை லெபனானிலுள்ள காட்டுக்கு மேலே அனுப்பி, குண்டுவீசி கருவியை முற்றாக அழித்து விட்டனர். இப்போது அந்தக் காட்டுப் பகுதியை ஹிஸ்பொல்லா அமைப்பினர் முற்றுகையிட்டு சோதனையிட்டு வருகின்றனர். காட்டுக்குள் வேறு ஏதாவது கருவிகளோ, அல்லது கருவியைப் பொருத்துவதற்காக வந்த இஸ்ரேலிய உளவுத்துறையினரோ இன்னமும் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக ஹிஸ்பொல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. http://viruvirupu.com/israel-detonates-communications-spy-device/tamil-news/11805/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |