கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அதன் அதிகாரிகள், ஊழியர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர். ஏதோ, இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருப்பது போல தங்களது நிலை மிகவும் பேராபத்தில் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகமும், மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் இடுக்கியில் உள்ள அரசு விடுதியில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 18 குடும்பங்கள் இங்கு தங்கியுள்ளன.
முல்லைப் பெரியாறுஅணை விவகாரம் தொடர்பாக வெடித்துள்ள கலவரத்தால் இவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அடிக்கடி கும்பல் கும்பலாக அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் வந்து சமூக விரோதக் கும்பல்கள் மிரட்டிச் செல்வதாக இவர்கள் கூறுகின்றனர்.
கேரள போலீஸாரிடம் இதுகுறித்து முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதே இல்லையாம். இதனால் முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர்கூறுகையில், ஏதோ இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போல நிலைமை உள்ளது. நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை, நிஜமாகவே அப்படித்தான் இங்கு நிலைமை உள்ளது. ஒரு நாள் தங்கியிருந்து பார்த்தால் அதை நீங்களே உணர்வீர்கள். எங்களுக்கு எந்தஉதவியம் கிடைப்பதில்லை, காவல்துறையினர் கண்டு கொள்வதே இல்லை என்றார் அவர்.
கடந்த பத்து நாட்களில் மூன்று முறை சமூக விரோதக் கும்பல்கள், அணைப் பகுதிக்கு வந்து அதிகாரிகளையும், ஊழியர்களையும் மிரட்டிச் சென்றுள்ளதாம். 2 முறை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதுகுறித்து புகார் கொடுக்கப் போனால் அதை கேரள போலீஸார் வாங்கிக் கொள்ளவே இல்லையாம்.மேலும் தங்களை அடிக்கடி மிரட்டி வரும் கும்பல்களையும் அவர்கள் தடுப்பதில்லையாம்.
குமுளியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கப் போனபோது நீண்ட நேரம் காத்திருந்ததுதான் மிச்சம். 2 நாட்களாக அலைந்தும் கூட எங்களது புகாரை அவர்கள் வாங்கவில்லை என்றார் அந்த அதிகாரி.
பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் அணைப் பகுதிக்கு வந்தபோது கூட அவருக்குப் பாதுகாப்பு அளிக்க கேரள காவல்துறையினர் மறுத்து விட்டனராம். மாறாக சாதாரண லுங்கியுடன் வந்து தமிழககத்தினரைப் பார்த்து கிண்டலடித்து பேசியுள்ளனர்.
இங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் அநத்ப் பணியை செய்வதற்காக நிறுத்தப்படவில்லை. மாறாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து அதுகுறித்து மேலிடத்திற்கு உளவு சொல்லும் உளவாளிகளாகவே செயல்படுகிறார்கள் என்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.
முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடவடிக்கை எடுத்து 18 குடும்பங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேச வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.