தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும் : அப்துல் கலாம் ஆலோசனை

Posted by Haja Mohideen (Hajas) on 12/14/2011

தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும் : அப்துல் கலாம் ஆலோசனை

டிசம்பர் 14,2011,23:22  IST

சென்னை: ""நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கி, நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், வேளாண்மை கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. அக்கூட்டமைப்பின் நிர்வாகிகள், வேளாண்மை துறை நிபுணர்கள், வேளாண்மை தொழில் முனைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்து பேசியதாவது: நாட்டில் பல்வேறு காரணங்களால் விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் உணவு உற்பத்தி அதிகம் தேவைப்படுகிறது. குறைந்த அளவு நிலத்தில், குறைந்த அளவு தண்ணீரில், குறைந்த அளவு மனித சக்தியை வைத்து, அதிகளவில் உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் நீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. தற்போது 1,500 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் தண்ணீரில் 300 டி.எம்.சி., தண்ணீர் நமக்கு கிடைத்தால் கூட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். நீர் பிரச்னை என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் உள்ளது. அமெரிக்காவில் கூட நதிநீர் பிரச்னை இருந்தது. அங்கு நதிகள் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டதால், 31 மாநிலங்கள் பயன் அடைகிறது. அதுபோல ஒரு நிலை நம் நாட்டிலும் உருவாக வேண்டும். நதிநீர் பிரச்னையால் உள்நாட்டு போர் உருவாகிவிடக் கூடாது. நதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் தேசியமயமாக்கப்பட வேண்டும். பெரிய அணைகளையும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் ராணுவம், கப்பல் படை போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து மாநில நதிகளையும் இணைக்க வேண்டும். வறண்ட பூமி பகுதிகளில் புதிய கால்வாய்களை வெட்டி விட வேண்டும். எல்லா பகுதிகளிலும் நீர் இருக்கும் போது, விவசாயத்தை தாராளமாக செய்ய முடியும். எந்த இடத்திலும் தேவையில்லாத நிலம் இருக்காது. தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மின் தொகுப்பு இருப்பது போல, தேசிய நீர் தொகுப்பு உருவாக்க வேண்டும். அதன் மூலம் மாநில அரசுக்கு தேவையான நீரை மத்திய அரசு பிரித்து கொடுக்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்னை உள்ளிட்ட எந்த நீர் பிரச்னையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.
குஜராத்தில் விவசாயம் தங்கு தடையின்றி நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்கிறது. விஞ்ஞான பூர்வமாக விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாநில விவசாய உற்பத்தியில் 9 சதவீதம் வளர்ச்சி என்ற நிலையில் உள்ளது. ஆனால், தேசிய அளவில் விவசாய வளர்ச்சி 2 சதவீதம் தான் உள்ளது. பீகாரிலும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, தமிழகத்திலும் விவசாய உற்பத்தி அதிகரிக்க வேண்டும். விவசாய தகவல் மையம் டில்லியில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், விவசாய தகவல் மையத்தை ஊராட்சிகள் அளவில் துவக்க வேண்டும்.
தரமான விதை, தரமான உரம், வங்கி கடன், எந்தெந்த விவசாயத்திற்கு எந்தெந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த மையத்தில் இடம் பெற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதிகமான உற்பத்தி கிடைத்த பின் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில், விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். விவசாயிகள் வங்கி கடனை கேட்டதும் வழங்க வேண்டும். மண்ணின் தன்மைகளுக்கேற்ப தரமான விதை, அதிக மகசூல் விதை, நல்ல உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அப்துல்கலாம் பேசினார். "முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான கேள்விகளை அப்துல்கலாமிடம் நிருபர்கள் எழுப்பிய போது, அவர், "தேசிய அளவில் நீர்நிலைகளை இணைக்கும் பணியை செய்ய வேண்டும். மின்சாரத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது போல தேசிய நீர் தொகுப்பு உருவாக்கி பயன்படுத்த வேண்டும்' என்றார்.

http://www.dinamalar.com/News_detail.asp?Id=367733






Other News
1. 11-01-2025 அமெரிக்காவை தாக்கும் தீ விபத்து குறித்து அறிஞர் அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி - S Peer Mohamed
2. 30-11-2024 உபி யில் ஷஹீதான 5 முஸ்லிம் இளைஞர்கள் - அரசின் திட்டமிடப்பட்ட அராஜகம் - S Peer Mohamed
3. 24-11-2024 Dubai: Indian Consulate issues new rules for repatriation of deceased expats remains - S Peer Mohamed
4. 13-11-2024 ஏர்வாடியில் இன்று (13-11-2024) கனத்த மழை, சாலையில் வெள்ளம் - S Peer Mohamed
5. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: தீயணைப்பு நிலையம். - S Peer Mohamed
6. 23-10-2024 NEMS Eruvadi: நெம்ஸ் வாழ்வியல் கல்வி சுற்றுலா 2024: நீதிமன்றம் - S Peer Mohamed
7. 12-10-2024 ரத்தன் டாடா: ஓரு சகாப்தத்தின் முடிவு - S Peer Mohamed
8. 02-10-2024 ஏர்வாடியில் திருநெல்வேலி மாவட்ட கேரம் போட்டி - S Peer Mohamed
9. 20-09-2024 ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி - S Peer Mohamed
10. 14-09-2024 MBBS டாக்டர் பட்டம் பெற்ற நடு முஹல்லம் டாக்டர் அம்ஜத் - S Peer Mohamed
11. 07-06-2024 வெற்றியாளர் இரண்டாவது இடம் (The Winner Comes Second) - S Peer Mohamed
12. 07-06-2024 இந்தியத் தேர்தல் முடிவுகளும் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் - S Peer Mohamed
13. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
14. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
15. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
16. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
17. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
18. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
19. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
20. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
21. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
23. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
24. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
25. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
26. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
27. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
28. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
29. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
30. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..