Posted by S Peer Mohamed
(peer) on 12/16/2011
|
|||
அன்புள்ள சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த மடல் தங்களை உயரிய ஈமானுடனும் சீரிய உடல்நலத்துடனும் சந்திக்கட்டுமாக....
ஏர்வாடி முஸ்லிம் சங்கம், அமீரகம் ( EMAN, UAE) சார்பாக ஏர்வாடி மக்களின் சிறந்த எண்ணங்களையும் தெளிந்த அறிவினையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏர்வாடியினை அனைத்து தீமைகளுமற்ற ஒரு நன்நகரமாக மாற்றுவதற்கு நம் அனைவருக்கும் பல அரிய சிந்தனைகள் இருக்கும். அந்த சிந்தனையினை எழுத்து வடிவமாக்கி அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ் அனைவரிடமிருந்தும் பெறக்கூடிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தவும் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் தனது பங்களிப்பினை முழுமையாக வழங்கும்.
கட்டுரைத் தலைப்பு - மீண்டும் ஒரு மதினாவை நோக்கி ( ஏர்வாடியினை வளப்படுத்துவதற்கான வழிமுறைகள்)
1. கட்டுரைகள் A4 அளவில் இரண்டு பக்கத்திற்கும் குறையாமலும் ஐந்து பக்கத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
2. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - நவம்பர் 1, 2011
3. கட்டுரைகளை கீழ்கண்ட முறையில் அனுப்பலாம்
- emandubai@gmail.com என்ற முகவரிக்கு மின்அஞ்சல் செய்யலாம்
- கட்டுரைப் போட்டி, P.o.Box : 1546, Dubai என்ற முகவரிக்கு அனுப்பலாம்
- ஈமான் டிரஸ்ட், 110 E/3, Meeran Building, North Main Road, Eruvadi 627103 என்ற முகவரிக்கு அனுப்பலாம்
4. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு - 300 திர்ஹம்
இரண்டாம் பரிசு -200 திர்ஹம்
மூன்றாம் பரிசு - 100 திர்ஹம்
அமீரகத்தில் உள்ள சகோதர சகோதரிகள் பரிசினை வென்றால் அவர்களுக்கு அமீரகத்தில் பரிசு வழங்கப்படும். ஏர்வாடி மற்றும் இதர ஊர்களில் வசிக்கும் சகோதர சகோதரிகள் வென்றால் அவர்கள் குறிப்பிடும் நபரிடம் ஏர்வாடியில் இந்தியப் பணமாக வழங்கப்படும்.
5. கட்டுரையாளர் தங்களது தற்போதைய முகவரியினையும் ஏர்வாடி முகவரியினையும் தவறாது குறிப்பிடுவதோடு தங்களின் தொலைபேசி எண்ணையும் தெளிவாக எழுதவும்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |