Posted by S Peer Mohamed
(peer) on 1/24/2012
|
|||
ஏர்வாடியில் அறிவிக்கப்படாத 6 மணிநேர மின்வெட்டை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு அமலில் இருந்து வரும் நிலையில் டவுன் பஞ்., பகுதிகளில் மூன்றரை மணிநேரம் மின்வெட்டு செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவிற்கு மாறாக அதிகப்படியாக ஏர்வாடி பகுதியில் மின்வெட்டு நடந்து வருகிறது. இந்த தொடர் மின்வெட்டு மற்றும் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏர்வாடி மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மமக ஏர்வாடி நகர தலைவர் பக்ருதீன் அலிஅகமது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யது கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன், மாவட்ட பொருளாளர் சர்தார்அலி, மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி மைதீன்அலி மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் பீர்முகம்மது நன்றி கூறினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |