ஜனாப் முகைதீன் (Mohamed Mohideen S) அவர்கள் facebook-ல் போஸ்ட் செய்தலிலிருந்து...
ஏர்வாடி மின் தடையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை 1993 லிருந்து நடைபெற்று தான் வந்துள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் வள்ளியூர் துணை மின் நிலையம் வந்துள்ளது. அவ்வளவும் நடைபெற்றும் நமதூருக்கு மின் வினியோகிக்க தனியாக மின் பாதை ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டதால் தளபதிசமுத்திரம் மின் பாதை வழியாக நமக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2011 வரை நாம் முறையிட்ட போதெல்லாம் இந்த மின்பாதை விவசாய மின் பாதை ஆகையால் விவசாயத்திற்கு மின்சாரம் வினியோகிக்கப்படும் போது மட்டும் தான் உங்கள் ஊருக்கும் வழங்க முடியும் என பல்வேறு தருணங்களில் வாரிய அதிகாரிகள் தெரிவித்தார்கள். திரும்ப திரும்ப இதையே காரணமாக சொல்லி வந்ததால் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எங்கள் மின் பாதை விவசாய மின்பாதை என நீங்களே பல முறை கூறியுள்ளீர்கள், ஆகையால் விவசாயகள் சந்திக்கும் மின்வெட்டை நாங்கள் இதுவரை சந்தித்தே வருகிறோம் ஆகையால் விவசாயிகளுக்கு கொடுக்கும் இலவச மின்சாரம் திட்டத்தின் கீழ் எங்களையும் கொண்டு வருவதோடு இதுவரை எங்களிடமிருந்து மின் கட்டணத்திற்காக வாரியத்தால் வசூல் செய்யப்பட்ட முழு தொகையையும் திரும்ப தரவேண்டும் என வாதாடியதால், விவசாய மின் பாதையாக இருந்த நமது மின் பாதை அன்றிலிருந்து கிராமப் புற மின்பாதை மாற்றி குறிப்பிட தொடங்கியுள்ளார்கள். அதிகாரிகள் ஏர்வாடி காரர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என செயல்படுவதற்கான ஒரு உதாரணம் இது. அதற்கான ஆவணங்களும் இத்துடன் இணைத்துள்ளேன். பல மோசமான அதிகாரிகள் இருந்தாலும் சில நல்லவர்களும் இருப்பார்கள் என்பதை மெய்பிக்கும் விதமாக ஒரு அதிகாரி நமதூருக்கு உதவி செய்ய முன் வந்தார். அவர் தீட்டிய திட்டம் தான் 4வது லைன். ஏனென்றால் தனி மின்பாதை உடனடியாக நிறைவேற்ற முடியாத திட்டம். பல வருடங்கள் கூட ஆகலாம். இடம் வேண்டும், செலவு நிறைய செய்ய வேண்டும் என்பதால் 4வது லைன் திட்டம் தான் அப்போதைய வழி என்பதை உணர்ந்து சம்மதித்தோம். ஆனால் அன்றைய எஸ்.சி. அந்த திட்டத்திற்கான பணத்தை ஏர்வாடி வியாபாரிகள் சங்கமோ அல்லது பொது மக்களோ கட்டினால் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் என கூறிவிட்டார்கள். ஆனால் வேறு ஒரு அதிகாரி பணம் கட்ட வேண்டாம் அவருக்கு கொடுக்கப்பட்ட அனுமதி உட்பட்டு கொஞ்சம் கொஞ்மாக அந்த பணியை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி தந்து அதற்கான பணிகளையும் செய்யவும் தொடங்கினார். அப்போது நமதூருக்கு களக்காடு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. சிறுக சிறுக வேலையும் நடைபெற்று வந்தது. இன்னிலையில் அந்த அதிகாரி மாற்றல் செய்யப்பட்டதால் விவசாயிகள் என்ற போர்வையில் சிலர் சென்று மீண்டும் ஏற்வாடியை தளபதிசமுத்திரம் மின் பாதையில் இணைக்க செய்தனர். ஏர்வாடி களக்காடு தனி மின்பாதையில் இருந்த காலத்தில் நமக்கு பல துன்பங்கள் வந்ந்தது. மின் அழுத்த குறைபாடு அதிகமாக இருந்தது. ஆனால் அது சொர்ப காலத்திற்கு மட்டுமே. அதே நேரம் பகலில் விவசாயத்திற்கான மின் விநியோகத்தை முற்றிலிமாக தடை செய்யப்பட்டிருந்த்து. இந்த கஸ்டத்திலிருந்து விவசாயிகள் விடுபட வேண்டுமென்றால் ஏர்வாடியை பிரிவிடக்கூடாது என முடிவு செய்து இன்று வரை செயல்பட்டு வருகிறார்கள். இன்று அந்த இலவச பயனாளிகள் வள்ளியூர் சென்று அதிகாரிகளை சந்த்தித்துள்ளார்கள். அவர்கள் அவர்களின் குறைகளுக்காக அதிகாரிகளை சந்திப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சோபனை இல்லை. நாம் சந்த்தித்த பின்பு உடனே அவர்கள் சந்திக்க செல்லவது தான் சந்தேகிக்க செய்கிறது. இப்போது மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்ததால் கிடைக்கப் பெற்ற சந்தர்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வது தான் சிறந்தது. இல்லையென்றால் இருக்கும் ஓரிரு தொழிற் கூடங்களும் நமது ஊரை விட்டு சென்று விடும். பொருளாதார மந்தம் ஏற்படும். முக்கியமாக நமது பேரூராட்சியை இதில் ஈடுபடுத்தலாம் என்றால் நேற்று தான் ஜனாப் ஏசி பீர் வாயிலாக தெரியவந்தேன், அதாவது பேரூராட்சி இன்னும் மேசராகவில்லையாம். அதாவது நம்மிடமிருந்து வசூல் செய்யபடுபவைகள் பேரூராட்சி மன்ற விகிசாரப்ப்டி, ஆனால் பேரூராட்சி மன்றமே ஆவணங்களின் அடிப்படையில் இன்னும் கிராமப்புற பஞ்சாயத்தாக தான் உள்ளதாம். அது என்றைக்கு மேஜராகி என்றைக்கி திட்டத்தை நிறைவேற்றுவது. ஆகையால் வள்ளல் குணம் கொண்டவர்கள் உடனடியாக இந்த சிறிய தொகைக்கான நிதியை ஏற்பாடு செய்திடும்படி உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
|