Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 2/3/2012
|
|||
ஜனாப் ஆசாத் அவர்கள் இன்று சில ஆவணங்களை கேட்டார்கள். உடனடியாக ஏற்பாடு செய்து விட்டோம். ஏர்வாடி மின்சார வாரிய இள நிலை பொறியாளர் மாற்றலாகலாம் என்ற நல்ல செய்தியும் கிடைத்தது. அதோடு உதவி மண்டல பொறியாளரையும் (ஏ.டி.) மாற்றி விட்டால் தான் நமது முயற்சிக்கு உடனடி வெற்றி கிட்டும். அந்த பெண் அதிகாரி (ஏ.டி.) எதிர்மறை கொள்கை கொண்டவர். கடந்த ஆண்டில் நடைபெற்ற, நானும் கலந்து கொண்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் என் வாயிலாக ஏர்வாடிக்கு தடையில்லா மின் பாதைக்கான வரைபடத்தை சமர்பித்தோம். அதை ஆராய சக்தியில்லை என்பதை ஏர்வாடி இள நிலை பொறியாளர், உதவி மண்டல பொறியாளரையும் (ஏ.டி.) யும் அந்த கூட்டத்திலேயே பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால், வள்ளியூர் துணைமின் நிலைய ஏ.டி, அவர்கள் அதை பார்த்து இவர்கள் கொடுத்துள்ள மின்பாதையின் வாயிலாக ஏர்வாடி நகர் பகுதிக்கு மின்சாரம் வழங்க இயலும் என தெரிவித்தவுடன், ஏர்வாடி உதவி மண்டல பொறியாளர் (ஏ.டி.) அவர்கள் பொதுமக்கள் கோரும் வாட்டர் சப்ளை மின்பாதை வழியாக மின்சாரம் ஏர்வாடிக்கு வழங்கினால் ஏர்வாடிக்கு அன்றைய தினத்தில் அமுலில் இருந்த இரண்டு மணி நேர மின் வெட்டு செய்ய இயலாது, ஆகையால் அந்த மின் பாதை வ்ழியாக ஏர்வாடிக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என வாதிட்டு அதில் அவர் வெற்றியும் பெற்றார். அந்த பெண் அதிகாரிக்கும் நமதூர் கருங்காலிகளிடம் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்களை பயன்படுத்தி ஊரை சீரழித்து அதிகாரி வாரியத்தில் நல்ல பெயர் பெற்றுவிட்டார். அவரையும் மாற்ற இதுவே தக்க தருணம். எங்களுக்கு ஏற்பட்ட நிறைய பாதிப்புகளை உங்களுடன் பகிந்துக் கொள்ள ஆசை, தட்டச்சி செய்ய நேரமின்மை காரணமாக முடியவில்லை மன்னிக்கவும். அதிகப்படியான மின் வெட்டு காரணமாக இண்டர்நெட் மையம் வாயிலாக வருமான்ம் மிகக் குறைவாகத் தான் எனக்கு இருந்து வருவதால் வேறு தொழிலில் ஈடுபடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதன் ஒரு பகுதியாக பங்கு சந்தை, இகோல்டு, காமாடிட்டி சந்தை, நிரந்தர கணக்கு அட்டை பெற்று தருதல், வெஸ்டர்ன் யுனியன், வாகன காப்பீடு, தரமிக்க காற்றாழை பொருட்கள் விற்பனை, ஷிபா போன்ற நம்பகமான நிறுவனங்களின் வீட்டு மனை விற்பனை முதலிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறேன். வெளியூரை சார்ந்த ஒருவரிடம் தாங்கள் வாங்குவதை தவிர்த்து என்னை போன்றவர்களுக்கு தங்களின் மேலான ஆதரவை தரும்படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன். நான் விற்று வரும் காற்றாழை பொருட்களில் ஏதேனும் ஒன்றை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களை வாங்கி பயன்படுத்தி பார்க்கச் சொல்லுங்கள், அதன் பிறகு அவர் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர் ஆகி விடுவார். வாகன காப்பீட்டில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் மலிவாக சிறிய சர்வீஸுடன் செய்து கொடுக்கின்றேன். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |