Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 2/9/2012
|
|||
09/02/2012 மாலை 6.15 மணியளவில் ஏர்வாடி, வடக்கு மெயின் ரோடு, மார்ஸ் கடை அருகிலிருந்து டாட்டா இன்டிகா ஒன்று ரேஸ் வாகனங்கள் கிளம்புவது போல் கிளம்பியது. அவ்வாறு கிளம்பும் போது எதிரே நின்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள், மூன்று மிதி வண்டிகளையும் ம்ற்றும் ஒரு நபரையும் இடித்து விட்டு கிளம்பியது. இதில் அதிர்ஷ்ட வசமாக மனிதனிருக்கு சிறுகாயங்களுடன் தப்பிக் கொண்டார். மோட்டர் சைக்கிகளுக்கும் ஒரு சைக்கிள் ஒரு சில பாதிப்புகளுடன் தப்பின, இன்டிகாவின் முன் பகுதியில் மாட்டிக் கொண்ட இரண்டு சைக்கிள்களையும் உரசிக் கொண்டே ஆலங்குளம் பாலத்தின் அருகில் வரை சென்றுவிட்டது. துரத்தி சென்று பிடித்தப் போது இருவர் இருந்தனர், மேலும் ஒருவர் தப்பி சென்றுவிட்டதாக இருவரில் ஒருவன் கூறினான். அவன் ஏர்வாடி குமார் டெய்லர் மகன் என்பது பின்பு தெரிய வந்தது. முதல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அந்த வாகனம் கேரளா பதிவு வாகனமாகும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |