Posted by Haja Mohideen
(Hajas) on 2/14/2012
|
|||
பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை குழந்தைகளிடம் திணிக்க கூடாது பிப்ரவரி 14,2012,02:05 IST
திருநெல்வேலி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் கணிதம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பணிமனை பாளை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் பகவதி தலைமை வகித்து பேசும் போது, ""குழந்தைகளிடம் பெற்றோர்கள் தங்கள் ஆசைகளையும், எண்ணங்களையும் திணிக்கின்றனர். அவ்வாறு திணிக்கும் போது குழந்தைகள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி தவறான பாதையில் செல்கின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்கள் ஆசைகளை குழந்தைகளிடம் திணிக்க கூடாது. இங்கு அளிக்கப்படும் பயிற்சியை ஆசிரிய, ஆசிரியைகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்'என்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார். பாளை ஜான்ஸ் கல்லூரி சுய நிதி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஞானக்கண் ஜெயராஜ், துணை முதல்வர் மரைக்குமார் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பாளை ஜான்ஸ் கல்லூரி செயலாளர் சீனிக்குமார் செல்வநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திர பாபு, திட்ட பணியாளர்கள் முத்துகுமார், காளிராஜ், சாந்தி, பாப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கருத்தாளர்களாக ஆறுமுகராஜ், முத்துராஜ், சுனுஜா, ஆண்டோஹார்டி பிரபா வளர்மதி, இவாஞ்சலின் பரமராஜேஸ்வரி, சிறப்பு கருத்தாளர்களாக பாளை ஜான்ஸ் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், பாளை சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியை தங்கம், சேவியர் பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் அந்தோணி சேவியர்ராஜ் சிறப்பு கருத்தாளர்களாக செயல்பட்டனர். செயல்பட்டனர். இதில் கணித ஆசிரியர்கள் 160 பேரும், சமூக அறிவியல் 140 பேரும் கலந்து கொண்டனர். 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு பாடங்களில் உள்ள கடினமான பகுதிகளை எளிமையாக மாணவர்களுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் நன்றி கூறினார். முன்னதாக, சென்னை ஆசிரியை உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரிய, ஆசிரியைகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இப்பயிற்சி வரும் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |