Posted by Haja Mohideen
(Hajas) on 3/1/2012
|
|||
தமிழகத்தில் மின்சார தேவைக்கு நவீன நீர்வழிச்சாலை திட்டமே நிரந்தர தீர்வு மார்ச் 02,2012,03:02 IST சங்கரன்கோவில்:தமிழகத்தின் வருங்கால மின்சார தேவைக்கு "தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டம்' தான் நிரந்தர தீர்வு என்று மத்திய அரசு நதிநீர் இணைப்பின் உயர் மட்டக்குழு உறுப்பினர் காமராஜ் தெரிவித்தார்.சங்கரன்கோவிலில் நேற்று மத்திய அரசு நதிநீர் இணைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் தொழிற்சாலைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வருங்காலத்தில் மின்சார தேவை அதிகமாக தான் இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. இதற்கு "தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டம்' தான் நிரந்தர தீர்வு. இந்த திட்டம் நதிநீர் இணைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தின் மூலம் எந்த ஒரு நதியில் தண்ணீர் அதிகமாக இருந்தாலும், அதனை தேவைப்படும் மற்ற நதிக்கோ அல்லது நதிகளுக்கோ தேவைப்படும் பொழுது கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்தில் உபரி நீரான வெள்ள நீர் மட்டுமே எடுக்கப்படுவதால் நமக்கு ஏராளமான தண்ணீர் கிடைக்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்சாரத்தில் 1300 மெகாவாட் சேமிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |