Posted by Haja Mohideen
(Hajas) on 3/3/2012
|
|||
காற்று வாங்க ஜன்னல்களை திறக்கிறீர்களா? திருடர்களிடம் உஷார் மார்ச் 02,2012,23:23 IST
சென்னை: காற்றுக்காக ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்து தூங்கும் வீடுகளில் மர்ம நபர்கள் குறி வைத்து, நகை மற்றும் பணத்தை திருடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்று வாங்க ஜன்னல்களை திறக்கிறீர்களா? உஷாராக இருங்கள். சென்னை மற்றும் புறநகரில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மின்சாரம் எப்போது போகும்; வரும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பல இடங்களில் நள்ளிரவு மற்றும் பகலில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புறநகரை ஒட்டியுள்ள படப்பை, மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, வஞ்சாவஞ்சேரி, வைப்பூர், ஆதனூர், ஊரப்பாக்கம், வண்டலூர், மலைப்பட்டு, மாகாணியம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும், 10 மணி நேரம் மின் தடை உள்ளது. இது போன்ற சமயங்களில், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் காலமும் துவங்கிவிட்டதால், பகலில் ஆடி, ஓடி உழைத்துவிட்டு இரவில் தூங்கும் சமயத்தில், மின்சாரம் தடைபடுகிறது. காற்றுக்காக கதவு, ஜன்னலை திறந்து வைத்து, பெண்கள் மற்றும் முதியவர்கள் படுத்து உறங்குகின்றனர்; சில இடங்களில் மாடியிலும் தூங்குகின்றனர். இதை திருடர்கள் சாதகமாக்கிக் கொள்கின்றனர். திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஏசுராமின் மனைவி ராஜேஸ்வரி, காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தார். நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரின் கழுத்திலிருந்த ஐந்து சவரன் செயினை, மர்ம நபர் பறித்து தப்பினார். தூக்கத்தில் நகை பறித்ததை அறிந்து சத்தம் போட்டார். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். திருவொற்றியூர் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இதுபோல, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக, வீடுகளில் திருடு போகும் நகைகள் மற்றும் பொருட்களை பற்றி புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றால், புகாரை வாங்கி போலீசார் வைத்துக் கொள்கின்றனர். திருடனைப் பிடித்ததும் வழக்கு பதிவு செய்து நகையைத் தருகிறோம் என, போலீசார் கூறுகின்றனர். இதனால், விலை உயர்ந்த பொருட்களை பறிகொடுத்த மக்கள், யாரிடம் முறையிடுவது தெரியாமல் தவியாய் தவிக்கின்றனர். ஜன்னல் மற்றும் வீட்டின் கதவுகளைத் திறந்து வைக்காமல் விழிப்போடு இருந்தால் தான், நகைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. காற்றுக்காக கதவு ஜன்னலை திறந்து வைக்கும் போது உஷாராக இருங்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |