வாஷிங்டன்: சூரியனில் நேற்று ஏற்பட்ட 2 பெரிய காந்த புயல்கள் பூமியை கடந்து சென்றன. ஆனால் பூமியின் காந்த விசையின் மூலம் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனில் அடிக்கடி காந்தப் புயல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சூரியனில் காந்த புயல் ஏற்பட்டது. பின்னர் அது படிப்படியாக உயர்ந்து ராட்சத புயலாக மாறியது.
இப்புயல் பூமியை 40 லட்சம் கி.மீ. வேகத்தில் வந்து தாக்கலாம் என்றும், அதனால் பூமியில் உள்ள தகவல் தொடர்பு, விமான சேவை, செயற்கை கோள்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்று நாசா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.
இந்த நிலையி்ல் பூமியின் மேற்கு பகுதியை நேற்று காலை 5.45 மணிக்கு இப்புயல் கடந்து சென்றது. ஆனால் பூமியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எதிர்பார்க்கப்பட்டதை விட மிக குறைந்த அளவிலான 2 புயல்கள் ஏற்பட்டது. இதனால் பூமியில் புயல் லேசாக மட்டுமே உணரப்பட்டது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நேற்று வீசிய காந்தப் புயல் வினாடிக்கு 1,300 கி.மீ. வேகத்தில் பூமியை கடந்து சென்றுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட காந்தப் புயல்களில் நேற்று ஏற்பட்டதுதான் பெரியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து வி்ஞ்ஞானிகள் கூறுகையில், "நேற்று காந்த புலத்தின் திசை எதிர்புறமாக அமைந்ததால், புயலின் வேகம் குறைந்தது. இதனால் பெரிய அளவில் புயல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சூரியனின் காந்த புலத்தின் தன்மை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இருப்பினும் பூமியின் காந்த புலத்தின் மூலம் பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது என்றனர்.
முன்னதாக கடந்த 1972ம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் சூரிய காந்தப் புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல கடந்த 1989ல் ஏற்பட்ட சூரிய காந்த புயலால் கனடாவில் கியூ பெக் மாகாணத்தில் மின்சாரம் தடை ஏற்பட்டு, 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.