Posted by Mohamed Rafiq
(namaduoor) on 4/17/2012
|
|||
துபாய்:"வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அந்நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு, அங்கு பணிபுரியும் இந்தியர்களின் பணி மற்றும் வாழ்க்கை தரம் மேம்பட முயற்சிக்க வேண்டும்' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா குறிப்பிடுகையில், "ஐக்கிய அரபு எமிரேட்டில் 17.5 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது குறித்து, சம்பந்தப்பட்ட அரசிடம் தூதரக அதிகாரிகள் பேச வேண்டும். வளைகுடாவில் வசிக்கும் இந்தியர்கள் பணியாற்றும் கப்பல்கள், சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்படுகின்றனர். கடத்தப்பட்ட இந்தியர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரங்களையெல்லாம் வளைகுடா பகுதியில் உள்ள தூதரக அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்' என்றார்.இரட்டை வரி உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கிருஷ்ணா கையெழுத்திட உள்ளார். துபாயில் நடக்கும் ஐக்கிய அரபு எமிரேட் - இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லாவுடன் கிருஷ்ணா முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |