Posted by S Peer Mohamed
(peer) on 4/24/2012
|
|||
டைம்ஸ் மக்கள் வாக்கெடுப்பில் அதிக எதிர்வாக்குகள் பெற்ற நரேந்திர மோடி! பிரபல டைம் இதழின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.
வாக்கெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமக்கு ஆதரவாக வாக்கு சேர்க்குமாறு குஜராத் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்து மோசடி செய்ததாக மோடி மீது காங்கிரஸ் கட்சி கடும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது. தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் மீது மோடியும் பதிலுக்கு குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையில் நேற்றுடன் முடிவடைந்த வாக்கெடுப்பின் படி மோடிக்கு அப்பட்டியலில் 256,792 வாக்குகள் ஆதரவாகவும், 266,684 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளன. இதையடுத்து அப்பட்டியலில் அதிகூடிய எதிர்வாக்குகள் பெற்றவராக நரேந்திர மோடி அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலிடத்தை Anonymous எனும் இணையத்தள ஹேக்கர்ஸ் குழுவினர் பிடித்துள்ளதுடன், இரண்டாம் இடத்தை Reddit இணையத்தள நிர்வாக இயக்குனரான Erik Martin பிடித்துள்ளார்.எனினும் இப்பட்டியலின் இறுதி முடிவை தீவிர பரிசீலனைக்கு பின்னர் டைம் சஞ்சிகையின் எழுத்தாளர் குழு ஏப்ரல் 17ம் திகதி அறிவிக்கவுள்ளனர். அன்னா ஹசாரே - 23997 , நவநீதம் பிள்ளை - 13790 வாக்குகள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அதிக எதிர் வாக்குக்கள் பெற்றவர் மோடியே ஆவார். 2002 ஆம் ஆண்டு இஸ்லாமிய இனப்படுகொலையில் மோடிக்கு தொடர்பு உள்ளதால் இஸ்லாமியர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதன் இறுதி முடிவி ஏப்ரல் 17 தேதி வெளிவருகிறது. The LIST: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107959,00.html
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |