Posted by Haja Mohideen
(Hajas) on 5/2/2012
|
|||
விமானத்தில் ஒபாமா ரகசிய தூக்கம்: அட, பின்லேடன் நினைவு தினம்!Viruvirupu, Wednesday 02 May 2012, 04:11 GMT
Bagram, Afghanistan: President Obama delivered his address at the end of an unannounced visit here to sign a long-term partnership agreement with the Afghan government and to mark, alongside American troops at Bagram air base outside this capital city, the first anniversary of the raid that killed Osama bin Laden.The trip came amid criticism at home that Obama is using the raid to advance his reelection prospects by featuring his decision to launch the mission in campaign videos and other political settings.பின்லேடன் கொல்லப்பட்டு 1-வது ஆண்டு பூர்த்தியடைந்ததை அவரது ஆதரவாளர்கள் ஒருவேளை மறந்திருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மறந்து விடவில்லை. காரணம், இது அவருக்கு ஜனாதிபதி தேர்தல் ஆண்டு. அவரது பிரதான பிரசாரங்களில் ஒன்று, பின்லேடன் வேட்டை! பின்லேடன் கொல்லப்பட்ட 1-வது ஆண்டு பூர்த்தி தினத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புரோகிராம்கள் என்ன என்பதை வெள்ளை மாளிகை ரகசியமாக வைத்திருந்தது. அன்று மாலை அமெரிக்க மக்களுக்கு ஒபாமா ஆற்றும் உரை இடம்பெறும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒபாமாவின் உரை ‘லைவ்’வாக ஒளிபரப்பாகும் என்று தெரிந்திருந்தது. ஆனால், எங்கிருந்து ஒளிபரப்பாக போகிறது என்று கூறப்பட்டிருக்கவில்லை. பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு பூர்த்தி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் காலடி வைத்தார் ஒபாமா. யாருக்கும் அறிவிக்கப்பட்டிராத விஜயம் இது. நன்றாகவே ரகசியம் காக்கப்பட்டிருந்தது. முதல்நாள் மாலை வரை வாஷிங்டனில் தமது புரோகிராம்கள் அனைத்தையும் திட்டமிட்டபடி முடித்துக்கொண்ட ஒபாமாவுக்காக, ஜனாதிபதியின் பிரத்தியேக விமானம் ஏர்ஃபோர்ஸ்-ஒன் தயாராக காத்திருந்தது. ஒபாமாவின் அன்றைய இரவுத் தூக்கம் விமானத்தில்தான். இரவு விமானம் ஆப்கானிஸ்தானை நோக்கிப் புறப்பட்ட பின்னரே, மீடியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏர்ஃபோர்ஸ்-ஒன் விமானம் ஆப்கான் தலைநகர் காபுல் ஏர்போர்ட்டில் இறங்காமல், நகருக்கு வெளியேயுள்ள பாக்ரம் விமானத் தளத்தில் (Bagram Air Base) தரையிறங்கியது. பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு பூர்த்தி தினத்தன்று, ஆப்கானில் தங்கியிருந்து யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரைதான் முதலில் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ஒபாமா. அப்படியே சந்தித்தார். அதன்பின், ஆப்கான் ஜனாதிபதியுடன் சில நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஆப்கானில் இருந்து அமெரிக்க ஜனாதிபதியில் உரை, அமெரிக்க மக்களுக்காக லைவ்வாக ஒளிபரப்பாகியது. அதுவே ஒரு த்ரில்லிங்காக அமைந்து விட்டது. தனது உரையில் ஒபாமா, “10 வரடங்களுக்கு மேலாக யுத்தத்தின் இருண்ட மேகங்கள் ஊடாக நாம் பயணம் செய்தோம். இன்று உலகின் புதிய தினத்தை வெளிச்சத்தில் காண்கிறோம். அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட இந்த யுத்தம் ஆப்கானிஸ்தானில் துவங்கியது. இங்கேதான் அது முடிகிறது” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், பின்லேடன் கொல்லப்பட்ட ஆபரேஷனை தனது பிரசாரமாக பயன்படுத்தும் ஒபாமா, சினிமாக்களில் ஹீரோ ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில்’ வந்து இறங்குவதுபோல, பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு பூர்த்தி தினத்தன்று ஆப்கானிஸ்தானில் இறங்கி, லைவ்வாக டி.வி.-யில் பேசி அமெரிக்கர்களை பரவசப்படுத்தியுள்ளார். ஒருவகையில் பார்த்தால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பின்லேடன் போட்டியிடுகிறார் என்று சொல்லலாம். பின்லேடன் ஜெயிக்கிறாரா பார்க்கலாம்!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |