Posted by Haja Mohideen
(Hajas) on 5/8/2012
|
|||
![]() தற்செயலாக கிடைத்த 100 ஆண்டு பழைய இந்திய போட்டோக்கள்!Viruvirupu, Tuesday 08 May 2012, 00:30 GMT
100 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் 178 போட்டோ நெகடிவ்கள், தற்செயலாக ஒரு ஷூ பாக்ஸில் இருந்து கிடைத்துள்ளன. எடின்பாரோ (ஸ்காட்லாண்டு) நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்களை தேடும்போது கிடைத்த பெட்டிக்குள், சுமார் 100 வருடங்கள் கைபடாத நிலையில் கிடைத்துள்ள கிளாஸ்-பிளேட் நெகட்டிவ்கள் (plate-glass negatives) இவை. தற்போது தற்செயலாக ஸ்காட்லன்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த போட்டோ நெகடிவ்களை இந்தியா உரிமை கோரலாம் என்று ஸ்காட்டிஷ் அதிகாரி ராபர்ட் என்ட்லேவர் கூறியிருக்கிறார். இவர் கூறியதை மறுத்துள்ள மற்றொரு அதிகாரி, நெகடிவ்வில் உள்ள காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை என்றாலும், நெகடிவ், ஸ்காட்டிஸ்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்கிறார். ![]() அந்த நாளைய வீர விளையாட்டா, ரியல் பைட்டா தெரியலை. இவ்வளவு நீண்ட காலத்துக்கு, ஷூ பெட்டி ஒன்றை யாரும் திறந்து பார்க்காமல் அலுவலகம் ஒன்றில் வைக்கப்பட்ருந்தது. ஆச்சரியமான விஷயம்தான். அதே நேரத்தில் இதுவரை யாருடைய கைகளிலும் படாமல் மூடிய நிலையில் இருந்த காரணத்தால்தான், நெகடிவ்கள் பழுதடையாமல் இருந்துள்ளன. ![]() கிங் ஜார்ஜ்-V, மற்றும் ராணி மேரியின் கல்கத்தா விசிட் வழமையாக இப்படியான பொருட்கள் அலுவலகங்களில் வைப்பதற்கான பாக்ஸ்களில் போடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அப்படி இந்த நெகடிவ்களும் வைக்கப்பட்டிருந்தால், கடந்த 100 ஆண்டுகளில் ஒரு தடவையாவது அலுவலகப் பொருள் என்று யாராவது திறந்து பார்த்திருப்பார்கள். அப்படியில்லாமல், இவை பீட்டர் லார்ட் பிரான்ட் ஷூ பாக்ஸ் (சைஸ்-9) ஒன்றில் போட்டு மூடப்பட்டு, ஸ்டோர் ரூமின் ஒரு மூலையில் இருந்திருக்கிறது. ![]() நீங்கள் கல்கத்தா சென்றிருந்தால், அங்குள்ள பிரபலமான ஸ்ட்ரான்ட் ரோடு தெரிந்திருக்கும். அந்த ரோடின் ஓரமாக 100 ஆண்டுகளுக்கு முன் ‘கூலாக’ இயங்கும் ஒரு மொபைல் சலூன்! இந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ் நாட்களில், கல்கத்தா பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்பது தெரிகிறது. இவற்றில் சில போட்டோக்கள் நிச்சயம் 1912-ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது எப்படியென்றால், பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-V, மற்றும் அரசி மேரியின் கல்கத்தா விஜயம் சில போட்டோக்களில் உள்ளது. அந்த விஜயம் நடைபெற்றது 1912-ம் ஆண்டில்தான். ![]() 100 வருடங்களுக்கு முந்திய வீதிக் காட்சி. மேளம் அடிப்பவரையும், டான்ஸ் ஆடுபவரையும் பாருங்கள்! நோ ட்ராஃபிக் ஜாம்!! இந்த போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் யார் என்பது மர்மமாகவே உள்ளது. (அந்த ஷூ பெட்டியின் உரிமையாளர் அவராக இருக்கலாம்) அவர் அநேகமாக கல்கத்தாவில் பணிபுரிந்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவராக இருக்கலாம். அந்த நாட்களில் பல ஸ்காட்டிஷ் அதிகாரிகள் கல்கத்தாவில் பணி புரிந்திருக்கின்றனர். ![]() கல்கத்தா துறைமுகத்துக்கு கப்பல் வருவதை வேடிக்கை பார்க்கிறார்கள். தற்செயலாக ஒரு ஷூ பாக்ஸில் இருந்து கிடைத்துள்ள 178 போட்டோக்களில் ஒருசில போட்டோக்களையே இங்கு தந்துள்ளோம். அனைத்து போட்டோக்களையும் பார்க்க விரும்பினால், எடின்பரோ நகரில் உள்ள Ancient and Historical Monuments of Scotland (RCAHMS) அலுவலகத்துக்கு ஒரு நடை போய்விட்டு வாருங்கள். போட்டோக்களையும் பார்க்கலாம், நெகடிவ்களையும் பார்க்கலாம்!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |