Posted by Mohamed Rafiq
(namaduoor) on 5/8/2012
|
|||
நெல்லையை சேர்ந்த, ராகுல் ரத்ததான கழக அமைப்பாளர், பிரம்மா என்பவர், 2010 ஜனவரி முதல், 2011 டிசம்பர் வரை இரண்டு ஆண்டுகளில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், தொழிற்சாலைகளில் எவ்வளவு மதிப்பில் மின்திருட்டு நடந்துள்ளது, எவ்வளவு அபராதம் செலுத்தியுள்ளனர், அரசுக்கு எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்ற விவரங்களை, தகவல் அறியும் ஆணையத்தின் மூலம் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டத்தில் மட்டும், 1,200 நிறுவனங்கள் மற்றும் வீடுகளில், மின்திருட்டு நடந்துள்ளது. இதில், நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை நிறுவனத்தில், 2010, அக்டோபர், 22ம் தேதி இரவில், மின்வாரிய அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், "கொக்கி மூலம்' மின்திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகள், காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால் எளிதில் மின்திருட்டு நடக்கின்றன. மின்திருட்டு பட்டியலில், பத்துக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. தொழிற்சாலைகள், பஞ்சாலைகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மட்டுமல்லாது, வீடுகளிலும் சிலர், மின் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, 1,200 பேரின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும், குறைந்தபட்சம், ஐந்து லட்சம், 10 லட்சம் ரூபாய் என அபராதம் செலுத்தியுள்ளது. நெல்லை தாழையூத்து பகுதியில் செயல்படும், கல்குவாரி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், ஏதாவது புகாரின் பேரில், அதிகாரிகள் சோதனை நடத்திய பின் தெரிய வந்தவை. அப்படி தெரியாமல், இன்னமும் மின்திருட்டு தொடர்ந்து நடப்பது அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்தூத்துக்குடி: தூத்துத்குடி மாவட்ட தொழிற்சாலைகளில் இன்னும் மோசமான மின்திருட்டு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகரது ஆலையில், 50 லட்சம் ரூபாய்க்கு மின்திருட்டு நடந்தாலும், அந்த நிறுவனத்தினர் அபராதம் செலுத்தாமலேயே தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும், 2010, 2011 ஆண்டுகளில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மின்திருட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இத்தகைய தகவல்களை திரட்டிய பிரம்மா கூறியதாவது: இந்த தகவல்களை திரட்ட, ஆறு மாதம் ஆனது. சில நிறுவனங்களின் பெயர்களை, வேண்டுமென்ற மறைக்கும் நோக்குடன், அதிகாரிகள் செயல்பட்டனர். சாதாரணமாக, மின் கட்டணத்தை செலுத்த தாமதம் ஏற்பட்டால், மின் துண்டிப்பு, அபராதம் என, பொதுமக்களிடம் கண்டிப்பு காட்டும் மின்வாரிய அதிகாரிகள், இத்தகைய கோடிக்கணக்கான மின்திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு பிரம்மா கூறினார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |