Posted by Mohamed Uvais
(jasmin) on 7/4/2012
|
|||
அன்புள்ள சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
ஈமான் சிறப்புக்கூட்டம் 29.06.2012 வெள்ளிக்கிழமை அதிகாலை 6.15 மணிக்கு சகோதரர் ஷம்சுதீன் ஷாபி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. ஆரம்பமாக சகோதரர் ஜமால், திருக்குர்ஆனின் கீழ்கண்ட வசனங்களை படித்து கூட்டத்தினை ஆரம்பித்தார்கள்.
11:116 உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள். மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
11:117 (நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
11:118 உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான். (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
11:119 (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான். ''நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்"" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
11:120 (நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
11:121 நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக. ''நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.""
11:122 நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.""
11:123 வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள். அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பாராமுகமாக இல்லை.
ஏர்வாடி செய்திகள் படிக்கப்பட்டன
1. ஏர்வாடியில் மூன்று இடங்களில் 60 லட்சம் செலவில் புதிய சாலைகள் உருவாக்கம்
2. அரசு ஆண்கள் பள்ளி வெளியே ஒரு சாலையோர பூங்கா அமைக்க திட்டம்
3. கோவில் வாசலில் ஒரு சுகாதார மையம் கொண்டு வருவதற்கான திட்டம்
4. புதிய காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது
5. அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் அறைகள் கட்டும் பணி நடப்பதாகவும் மற்றும் ஆங்கிலமொழி வாயிலாக கல்வி கற்றுக்கொடுக்க தனி வகுப்புகள் தொடங்க திட்டம்.
6. அரசு பெண்கள் பள்ளி சுற்றியுள்ள இடத்தில் மதில் கட்டும் பணி நடைபெற உள்ளது.
7 . அனைத்து தெருக்களையும் சமம் செய்யும் பணி நடை பெற்று கொண்டுள்ளது.
8. அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது 9. ஏர்வாடியின் குடிதண்ணீரின் தேவை அதிகமாக இருப்பதால், புதிதாக தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும்
.நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் உதவிகளை செய்ய வேண்டும் என்றும் உறுப்பினர்கள் ஆலோசனை அளித்தார்கள். மேலும் ஏர்வாடி நலன் கருதி நமது பஞ்சாயத்தில் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அதற்கென ஒரு வலைத்தளம் உருவாக்கி அதில் பதிந்து வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.இறுதியாக சகோதரர் இப்ராஹிம் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |