Posted by Mohamed Uvais
(jasmin) on 7/7/2012
|
|||
காஷ்மீரில் இணக்கத்துடன் வாழும் முஸ்லீம் - சீக்கியர்கள்ஸ்ரீநகர்,ஜூலை.7 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முஸ்லீம் மக்களும் சீக்கியர்களும் மிகவும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இணக்கும் இளம் சமுதாயத்தினர்களிடமும் நிலவச் செய்ய வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் உமர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார். குரு ஹர்கோவிந்த் சிங் பிறந்த தினத்தையொட்டி உமர் அப்துல்லா சீக்கிய மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்து, முஸ்லீம், சீக்கிய மத தத்துவங்களால் நாம் இணைக்கப்பட்டுள்ளோம். அதற்கு தகுந்தவாறு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இது மேலும பலப்படுத்தப்படுவதோடு இளம் வயதினர்களிடையே பரவச் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். முஸ்லீம்-சீக்கியர்களின் ஒற்றுமையால் மாநிலத்தில் அமைதி தொடர்ந்து நிலவுவதோடு விரைவான முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். அனைத்து மதங்களும் நீதி,நேர்மை, ஒற்றுமை,இறக்கம் தர்மம் ஆகியவற்றை போதிக்கின்றன. வகுப்பு, சமூக ஒற்றுமையும் அமைதியும் நில நாம் அனைவரும் தொண்டாற்ற வேண்டும் என்று அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் உமர் அப்துல்லா மேலும் கூறியுள்ளார். http://www.thinaboomi.com/2012/07/05/13858.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |