Posted by Haja Mohideen
(Hajas) on 7/29/2012
|
|||
தாமிரபரணியில் மீண்டும் அக்கிரமிப்புகள்: தண்ணீர் பஞ்சம் வருமா?ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 29, 2012, 14:44 [IST]
நெல்லை: கடந்த சில வாரங்களுக்கு முன் வருவாய்த் துறையினரால் தாமிரபரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல வீடுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் மீண்டும் குறுக்குத்துறை அருகே தாமிரபரணி ஆற்றுக்குள் அனுமதியின்றி பெரிய கட்டிடங்கள் மற்றும் செங்கல் சூளைகள் உருவாகி வருகிறது. இதனால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காதோ என்ற அச்சத்தில் நெல்லை மாவட்ட மக்கள் உள்ளனர். பொதிகை மலையில் உற்பத்தியாகி புன்னக்காயல் வரை பயணித்து நெல்லை, தூத்துககுடி, விருதுநகர் ஆகிய மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் புனித நதியான தாமிரபரணி சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. அந்த ஆற்றில் மணல் அள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. சுத்தமல்லி, சீவலபேரி, பாலமடை, ராஜவல்லிபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்படை வீடு ஆகிய பகுதிகளில் 15 அடி ஆழம் வரை ஆற்றுக்குள் உள்ள மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து தாமிரபரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 791 வீடுகளை அகற்றினர். ஆனால் அதன் பிறகு வண்ணார்பேட்டை, கருப்பன்துறை, ராஜவல்லிபுரம், திருமலைகொழுந்துபுரம், கீழநந்தம், சீவலபேரி, வல்லநாடு போன்ற பகுதிகளில் ஆற்றங்கரையை ஒட்டி நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் புதிதாக முளைத்துள்ளன. இதனால் குடிநீர் தேவை என்னவாகுமோ என்ற அச்சத்தில் நெல்லை மாவட்ட மக்கள் உள்ளனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |