Posted by Haja Mohideen
(Hajas) on 8/14/2012
|
|||
துபாயில் ஈமான் அமைப்பின் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2012
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி 14.08.2012 அன்று (ஹிஜ்ரி 1433 ரமலான் பிறை 27) இரவு தராவீஹ் தொழுகைக்குப் பின் 10.30 மணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடைபெற இருக்கிறது என்று பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அமீரக சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சிறப்பு அழைப்பாளர் தஞ்சாவூர் ஆற்றாங்கரை பள்ளி இமாம் மௌலவி அல்ஹாபிழ் செய்யிது அஹ்மது ஆலிம் மிஸ்பாஹி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் சீருரை வழங்குகிறார். சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகச்சிகள் நடைபெறும். பள்ளியின் மேல் தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இப்புனித இரவின் நற்பயனை அடைய விழாவில் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 800 79 09 / 050 51 96 433 ஆகிய அலைபேசி எண்களிலோ அலல்து info@imandubai.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |