Posted by S Peer Mohamed
(peer) on 8/18/2012
|
|||
ஏர்வாடியில் நேற்று (முதல்) மழை பெய்தது! ஏர்வாடியில் நேற்று மழை பெய்தது. இந்த வருடத்தின் முதல் மழையாக நேற்றைய மழை அமைந்தது. அதுவும் சிறிது நேரம் தான். மழைக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றும், ரமளானில் பல பேர்களின் துஆவிற்குப் பிறகும் மழை இன்னும் சரியாக ஏர்வாடியில் பெய்யவில்லை. ஆனால் சுற்றி உள்ள பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. ஒரு காலம் இருந்தது. ஏர்வாடி மக்கள் மழைக்கான சிறப்புத் தொழுகை தொழுதால் உடனே மழை பெய்தது ஆனால் இப்போது நிலமை அவ்வாறு இல்லை. இது சிந்திக்க வேண்டிய விசயம். ரமளானில் தொழுகை நேரத்திலும் வெளியில் பகிரங்கமாக கேரம் போடு ஆடும் இளைஞர்கள் கூட்டம், அருகிலேயே தூய இஸ்லாத்தை அறிந்திட மாநாட்டு அழைப்பிதழ், யாரேனும் தன்னுடன் வம்புக்கு வந்தால் நான் நோன்பாளி என்று நாசுக்காக விலகிவிட கற்றுத் தந்த மார்க்கத்தின் பெயரால் ரமளானிலும் பகிரங்கமாக தட்டி போர்டு போர்கள் etc.. இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தை விட்டு வெகு தூரம் போய்க் கொண்டிருக்கின்றோம். மழை இல்லாததன் காரணம் நமக்குத் தெரியாததல்ல. தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்துக் கொண்டிருக்கின்றோம். இதை படிக்கும் அனைவரும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடி இறைவனிடம் மழைக்காக இறைஞ்சுவோமாக... யா அல்லாஹ்
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |