Posted by S Peer Mohamed
(peer) on 9/1/2012
|
|||
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் இருந்த ஒரு நல்ல மனிதரின் முயற்சியால் இந்த பகுதி மக்களில் சில பேர் இஸ்லாத்தை தழுவினர். இவர் மாற்று மத சகோதரர்களின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். தொழுகைக்காக ஒரு பள்ளியை நிறுவி அதில் தொழுகை நடைபெற்று வந்தது. இந்த தொழுகை பள்ளி களக்காட்டைச் சேர்ந்த ரபீக் ஹாஜியார் அவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்டது. பலவருடங்களாக நடைபெற்றுவரும் கந்தூரி விழாவில் சுற்றிலும் உள்ள மாற்று மதச் சகோதரர்கள் பெருமளவில் கலந்துகொள்வது வழக்கம். பல பேர் இந்த பள்ளிக்காக தங்களது சொத்துக்களை அளித்திருந்தனர். நாளடையில் இந்த சொத்துக்களில் பல ஆக்கிரத்தினாலும், சிலர் விற்றதாலும் குறைந்து கொண்டிருந்தது. தற்போதை பள்ளி நிர்வாகத்தினரின் பெரு முயற்சியால் மீதி உள்ள சொத்துக்களையாவது பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பள்ளிவாசலைச் சுற்றி காம்பெளண்ட் சுவர் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கான முழு செலவையும் ஏர்வாடியைச் சேர்ந்த நல்மனதுடைய செல்வந்தர் ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மாற்றுமதச் சகோதரர் ஒருவர் இதனை ஒட்டி அமைந்துள்ள தனது இடத்தையும் இந்த பள்ளிக்காக அளித்தது குறிப்பிடத் தக்கது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |