Posted by Haja Mohideen
(Hajas) on 9/3/2012
|
|||
இன்று முதல் ஏ.டி.எம்.மில் (ATM) பணம் எடுக்கும்போது ஜாக்கிரதை!Viru News, Monday 03 September 2012, 10:33 GMT
இந்திய ரிசர்வ் பேங்க் (Reserve Bank of India – RBI) உத்தரவு ஒன்றை, அனைத்து இந்திய வங்கிகளும் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வருகின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சகல ஏ.டி.எம். எந்திரங்களும், இந்த உத்தரவுக்கு ஏற்றபடி இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும், ஏ.டி.எம். எந்திரத்தில் நீங்கள் உங்கள் கார்டை போட்டு பணம் கோரும்போது, பணம் வெளியே வருவதற்கு சில விநாடிகளில் இருந்து ஒரு நிமிடம் வரை எடுக்கும் (பேங்குக்கு பேங்க் வித்தியாசம்) அதற்குள் வேறு ஜாலியான ஜோலி எதிலாவது உங்கள் கவனம் சென்றுவிட்டால், வெளியே வந்த பணம் சிறிது நேரம் உங்களுக்காக காத்திருந்துவிட்டு, மீண்டும் எந்திரத்துக்கு உள்ளேயே சென்றுவிடும். அப்படி செல்லும் பணம், ஏ.டி.எம்.க்கு உள்ளே தனியாக ஒரு ட்ரேக்கு சென்றுவிடும். சில நிமிடங்களில், எங்களது கணக்கில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும். இந்த நடைமுறை இன்றில் இருந்து மாற்றப்பட வேண்டும் என இந்திய ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டுள்ளது. புதிய நடைமுறையில், வெளியே வந்த பணம், மீண்டும் உள்ளே செல்லாது. இன்று முதல், பழைய நினைப்பில் இருந்து விடாதீர்கள். பணத்தை நீங்கள் எடுக்க தவறினால், அடுத்து வருபவருக்கு தீபாவளி! மீண்டும் அந்தப் பணம் உங்கள் கைக்கு வருவது, பா.ம.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது போல!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |