Posted by Haja Mohideen
(Hajas) on 9/5/2012
|
|||
சிவகாசியில் பயங்கர தீ விபத்து! பலர் பலி! பலர் மயக்கம்! டி.வி. நிருபர் படுகாயம்! Wednesday 05 September 2012, 10:27 GMT சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஓன்றில் சற்றுமுன் ஏற்பட்ட வெடிவிபத்தில் பல தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தீ விபத்தின் போது ஆலையில் பணியிலிருந்த 184 பேரில் 50 பேர் உடனே வெளியே ஓடி வந்ததில், உயிர் தப்பினர். தற்போது மீதி எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்பதில் குழப்பம் நிலவுகிறது. சிவகாசி முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில்தான் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பட்டாசு அறையில் பிடித்த தீ 45 அறைகளுக்கு அடுத்தடுத்து பரவியது. 45 அறைகளிலும் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும், பட்டாசுகளுக்கான வெடி பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த பட்டாசுகளும், வெடி மருந்துகளும் வெடித்துத் சிதறின. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெரும் சத்தத்துடன் அந்த தொழிற்சாலையே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. விருதுநகர், சிவகாசி, சாத்தூரில் இருந்து வந்த ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வந்துள்ளன. பட்டாசு தொடர்ந்து வெடிப்பதால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இந்த சம்பவத்தை நெருக்கமாக படம் எடுக்கச் சென்ற ஜீ டிவியின் நிருபர் வைத்தி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வெடி விபத்தை வேடிக்கை பார்க்க கூடியிருந்த பொதுமக்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி விபத்தை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதே மூலப்பொருட்கள் வைத்திருந்த அறை வெடித்து சிதறியது. அதனால் மயங்கி விழுந்த 50 பேரில் 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகாசியில் நடந்த தீ விபத்துகளிலேயே இது தான் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |