Posted by Haja Mohideen
(Hajas) on 9/10/2012
|
|||
கலவர பூமியில் இந்து கோவிலை காக்கும் முஸ்லிம்கள்
செப்டம்பர் 10,2012,06:56 IST சமீபத்தில், நாட்டையே உலுக்கும் வகையில், அசாம் மாநிலத்தின் சில மாவட்டங்கள், கலவர பூமியாக உருவெடுத்த நேரத்தில், அங்குள்ள கோல்பரா மாவட்டம் மட்டும், அமைதிப் பூங்காவாக விளங்கி, மற்ற பகுதியினருக்கு உதாரணமாகத் திகழ்கிறது. 80 பேர் பலி: அசாம் மாநிலத்தின், சில மாவட்டங்களில், சமீபத்தில், போடோ பழங்குடியினருக்கும், வங்க தேசத்திலிருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினருக்கும் இடையே, பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில், 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கிஉள்ளனர்.தற்போது, நிலைமை சீராகி விட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பு மக்களிடையே ஏற்பட்ட மனக் காயங்கள், ஆறியதாகத் தெரியவில்லை. தலைநகர் கவுகாத்தியில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள தூப்ரி மாவட்டத்தில், இப்போதும் நிலைமை சரியாகவில்லை. அவ்வப்போது வன்முறைகள் நடந்து வருகின்றன.அதே நேரத்தில், தூப்ரியின் அண்டை மாவட்டமான, கோல்பரா, வன்முறை சுவடுகள் எதுவுமின்றி, அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அசாமுக்கும், கோல்பராவுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாததைப் போன்று, இப்பகுதியில் இயல்பு வாழ்க்கை நடப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.சேதமில்லாமல் பாதுகாப்பு: கோல்பரா மாவட்டத்தில் உள்ள ஜெய்பும் கிராமத்தில், காமாக்யா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, எந்த வித சேதமும் ஏற்படாமல், பாதுகாத்து வருவதில், இப்பகுதி முஸ்லிம்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, காமாக்யா கோவிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான, அப்துல் காதர் கோண்ட்கர், "தினமலர்' நிருபரிடம் கூறியதாவது:கோல்பரா மாவட்டத்தை பொறுத்தவரை, இந்துக்களோ, முஸ்லிம்களோ, யாராக இருந்தாலும், அமைதியை பேணிக் காப்பதையே முழு நோக்கமாகக் கொண்டு, செயல்பட்டு வருகிறோம். அதனால், காமாக்யா கோவிலையும், அதன் புரோகிதர் மற்றும் அவரது குடும்பத்தையும் கவனத் துடன் பாதுகாத்து வருகிறோம். எந்த மாதிரியான சூழ்நிலை உருவானாலும், கோவிலை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து, இப்பகுதி மக்கள் யாரும் விலக மாட்டார்கள். திணிக்க முடியாது: ஜெய்பும் கிராமத்தில் வசிக்கும், ஒரே இந்து குடும்பம், புரோகிதர் முகுந்த பர்மனின் குடும்பமே. இக்குடும்பத்துக்குத் தேவையான பண உதவி முதல், எல்லாவற்றையும் கிராம மக்களே அளித்து வருகின்றனர். மதவாதத்தை, இந்த கிராமத்தில் யாராலும் திணிக்க முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கூட, வன்முறையாளர்கள் யாரும், காமாக்யா கோவிலை நெருங்கவில்லை.இவ்வாறு அப்துல் காதர் கூறினார்.- நமது கவுகாத்தி நிருபர் -
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |