Posted by Haja Mohideen
(Hajas) on 9/25/2012
|
|||
திண்டுக்கல் மாவட்டம் கள்ளநோட்டு உஷார்!Viruvirupu, Tuesday 25 September 2012, 02:45 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள போலீஸ், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல் சுற்றுலா மையமாக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் இங்கு வருகின்றனர். தவிர, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கும் வெளி மாநில வியாபாரிகள் பலர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வருபவர்களுடக் கலந்து வரும் ஒரு கும்பல், மாவட்டத்தின் பல இடங்களில் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் விட்டுவருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வங்கிகள், மார்க்கெட், டாஸ்மாக் கடைகள் என பல இடங்களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் கள்ளநோட்டு கும்பல், திண்டுக்கல், பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் தங்கி, புழக்கத்தில் விடுவது தெரியவந்துள்ளது. இவர்களை பிடிக்க, போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |