Posted by S Peer Mohamed
(peer) on 9/26/2012
|
|||
திருநெல்வேலி : நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் கந்துவட்டி வசூலித்து தற்கொலைக்கு தூண்டியவர் கைது செய்யப்பட்டார்.நெல்லை மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராபின்சன் அலுவலக அறையில் கடந்த மாதம் 31ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். கடன் தொல்லையால் மனமுடைந்து ராபின்சன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. ராபின்சன் வாங்கியிருந்த கடன்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாளை. கே.டி.சி., நகர் விஜய துர்காபுரி நகரை சேர்ந்த சுடலைக்கண்ணுவிடம்(51) ராபின்சன் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதும், கடனை திருப்பி செலுத்தியும் கூடுதல் தொகை கேட்டு ஏ.டி.எம்., கார்டு, பாங்க் பாஸ்புத்தகத்தை ராபின்சனிடம் இருந்து சுடலைக்கண்ணு பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாளை. உதவி கமிஷனர் ராஜமன்னார், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று சுடலைக்கண்ணுவை கைது செய்தனர். சுடலைக்கண்ணுவிடம் இருந்து நெல்லை மாவட்ட போலீசில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமியின் ஏ.டி.எம்., கார்டு, பாங்க் பாஸ் புத்தகம், தென்காசி தொழிலாளர் அலுவலக ஊழியர் எழுதி கொடுத்த 13 லட்சம் ரூபாய் கடன் பத்திரம், பேராச்சி என்பவரின் ஏ.டி.எம்., கார்டு கைப்பற்றப்பட்டது. 5 ஏ.டி.எம்., கார்டுகள், பாங்க் பாஸ் புத்தகங்கள், 10 கடன் பாண்ட் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது. பலரிடம் சுடலைக்கண்ணு கந்துவட்டி வசூலித்துவந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சுடலைக்கண்ணு நேற்று நெல்லை ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுடலைக்கண்ணுவிற்கு சொந்த ஊர் ராதாபுரம் அருகேயுள்ள வேப்பிலான்குளம்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |