Posted by S Peer Mohamed
(peer) on 9/26/2012
|
|||
திருநெல்வேலி : அமெரிக்காவில் இஸ்லாமை இழிவுபடுத்தி குறும்படம் வெளியானதை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட முத்தவல்லிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்காவில் இஸ்லாமை இழிவுபடுத்தி குறும்படம் வெளியிடப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட முத்தவல்லிகள் சங்கத்தினர் பாளை. ஐகிரவுண்ட் முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தலைவர் நெய்னாமுகமது தலைமை வகித்தார். முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யதுஅகமது கபீர், கைலாசபுரம் ஜூம்ஆ பள்ளிவாசல் செயலாளர் வருசைமைதீன், முஸ்லிம் அனாதை நிலைய இணைச்செயலாளர் பாரூக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத்தலைவர் துராப்ஷா முன்னிலை வகித்தனர். முகமதுஇப்ராகிம் கிராஅத் ஓதினார். சங்க செயலாளர் முகமதுஷாபி வரவேற்றார். முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யதுஅகமது கபீர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கோதர்மைதீன், ஷம்சுல்ஆலம், முஸ்லிம்லீக் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லை மஜீத், மாதஇதழ் ஆசிரியர் பீர்முகமது, வடக்குப்படை பள்ளிவாசல் தலைவர் சாகுல்ஹமீது உட்பட பலர் பேசினர். சாகுல்ஹமீது தொகுத்து வழங்கினார். இஸ்லாமை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் குறும்படம் தயாரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது, இப்பிரச்னையில் ஐ.நா., தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, இச்செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிப்பது, முஸ்லிம்கள் அமைதி காக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், முக்கியப்பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்குழுவினர் கோஷமிட்டனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |