Posted by Haja Mohideen
(Hajas) on 9/26/2012
|
|||
சர்ச்சை படத்தை நீக்க YouTubeக்கு ஆர்டர்Viruvirupu, Wednesday 26 September 2012, 04:31 GMT
இஸ்லாமை அவதூறு செய்ய அமெரிக்க திரைப்படத்தின் ட்ரெயிலரை தடை செய்துள்ள பிரேசில் நாட்டு கோர்ட், அந்தப் படத்தின் ட்ரெயிலரை அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என YouTubeக்கு ஆர்டர் போட்டுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ போலோ நகரில் உள்ள மாநில நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரேசில் நாட்டில், இந்த நகரத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள நேஷனல் இஸ்லாமிக் யூனியன் என்ற அமைப்பு, YouTubeக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது. பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுஷெஃப், மேலைநாட்டு அரசுகளை “Islamophobia” என்று கடுமையாக விமர்சித்த தினத்துக்கு மறுதினம், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |