Posted by Haja Mohideen
(Hajas) on 10/18/2012
|
|||
சென்னை வருமானவரி துறையின் எச்சரிக்கை: இ-மெயில் ஜாக்கிரதை!Viruvirupu, Thursday 18 October 2012, 07:51 GMT
“வருமானவரி துறையிடம் இருந்து வருவதுபோல, போலி இ-மெயில்கள் பலருக்கு வருகின்றன. இது தொடர்பாக ஜாக்கிரதையாக இருக்கவும்” என சென்னை வருமான வரித்துறை அறிவித்துள்ளது. சென்னை வருமானவரி துறை தலைமை ஆணையாளர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி கே.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருமானவரி ரீபண்டு தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு, வருமான வரி செலுத்திய பலருக்கு info@incometaxindia.gov.in என்பது உள்ளிட்ட பல்வேறு இ-மெயில் முகவரிகள் மூலமாக இ-மெயில் வந்து கொண்டிருப்பது குறித்து வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரித்துறை ரீபண்டு வழங்க வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு யாருக்கும் இ-மெயில் மூலம் தகவல் கேட்கவில்லை என்று வரி செலுத்துனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற போலி இ-மெயில்கள் குறித்து கவனமாக செயல்படுமாறும், அது போன்ற இ-மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது. வருமானவரி ரீபண்டு தொடர்பான சந்தேகம் இருந்தாலோ, அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ, அது குறித்து சம்பந்தப்பட்ட வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |