Posted by Mohamed Rafiq
(namaduoor) on 11/6/2012
|
|||
தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி கஜலட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் காலை நடந்தது. அப்போது, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் சேக்பரீத், செயலாளர் ஜாக்கீர் அப்பாஸ், பொருளாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தலைமையில் 200 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத் துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாக திருப்பூர் நொய்யல் வீதி அரசு பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகைகளை நடத்தி வந்து உள்ளோம். அதே பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 27–ந் தேதி காலை 7 மணிக்கு பக்ரீத் தொழுகை நடத்த சென்ற போது ‘அரசு பள்ளி வளாகங்களில் மதவழிபாடு நடத்த மாவட்ட கலெக்டர் தடைவிதித்து உள்ளதாக கூறி போலீசார் தடுத்தனர். தொழுகை நடத்த அனுமதி ஆனால் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நடத்துவது நடைமுறையில் உள்ளது. சில அரசு அலுவலக வளாகங்களில் நிரந்தரமாக மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இவை அனைத்தும் சட்ட மீறல்களாகும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். தொழுகை நடத்தினார்கள் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கஜலட்சுமி, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். ஆனால் கலெக்டர் வந்து கூறினால் தான் இந்த கருத்தை ஏற்போம் என்று கூறி கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனர். கலெக்டர் உடுமலை சென்று இருப்பதால் வர தாமதாகும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி கூறிய கருத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் மதியம் 1 மணி ஆனதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு இடத்தில் மனு கொடுக்க வந்த முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் தொழுகை நடத்தினார்கள். சுமார் ¼ மணி நேரம் தொழுகை நடந்தது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட் டது. இந்த சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம், திருப்பூர் ஆர்.டி.ஓ. முருகையா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |