Posted by Haja Mohideen
(Hajas) on 11/7/2012
|
|||
நெல்லை–மும்பை தாதர் இடையே புதிய ரெயில் ராமசுப்பு எம்.பி. நாளை, தொடங்கி வைக்கிறார் பதிவு செய்த நாள் : Nov 07 | 10:55 am
நெல்லை, நெல்லைக்கும், மும்பை தாதருக்கும் இடையே இயக்கப்படும் புதிய ரெயில் சேவை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி. புதிய ரெயிலை தொடங்கி வைக்கிறார். மும்பைக்கு புதிய ரெயில்மும்பை தாதரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலை நெல்லை வரை நீட்டித்து ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ரெயில் தற்போது நெல்லை வரை புதிய ரெயிலாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் நாளை (8–ந் தேதி) முதல் நெல்லையில் இருந்து இயக்கப்படுகிறது. ராமசுப்பு எம்.பி. தொடங்கி வைக்கிறார்இதற்கான தொடக்க விழா நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நாளை பிற்பகல் 2.30 மணி அளவில் நடக்கிறது. ராமசுப்பு எம்.பி கொடி அசைத்து ரெயிலை (வண்டி எண்–11022) தொடங்கி வைக்கிறார். வாரந்தோறும் ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.45 மணி அளவில் நெல்லையில் இருந்து இந்த ரெயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் மும்பை தாதரில் இருந்து, இரவு 9.30 மணிக்கு நெல்லைக்கு புறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர், யஷ்வந்த்பூர் வழியாக மும்பை சென்றடைகிறது. இந்த தகவல் ராமசுப்பு எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவு விவரம்மும்பை தாதருக்கு இயக்கப்படும் இந்த புதிய ரெயிலுக்கான முன்பதிவு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |