Posted by Haja Mohideen
(Hajas) on 11/12/2012
|
|||
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் நவம்பர் 12,2012,03:02 IST
ஏர்வாடி:ஏர்வாடியில் மின்சாரம் தாக்கி இறந்தவர் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் உடலுடன் மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஏர்வாடி 9ம் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரா சாகிப். ஏர்வாடி பஸ் ஸ்டாப் அருகே எஸ்டிடி., பூத் மற்றும் விழா காலங்களில் வெடிக்கடையும் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்து வருகிறார். தற்போது அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக கடைக்கு தனது கடைக்கு எதிரே உள்ள உறவினரான சலீம் என்பவரது கடையில் உள்ள இன்வெட்டரில் இருந்து மின்சாரம் கொண்டு வர முடிவு செய்தார்.அதற்காக மின்வயரை இழுப்பதற்காக ஏர்வாடி 3வது தெருவை சேர்ந்த சலாகுதில் மகன் பீர் (30) என்பவரை வேலைக்கு அழைத்துள்ளார். http://www.dinamalar.com/district_detail.asp?id=584562 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |