Posted by Haja Mohideen
(Hajas) on 11/16/2012
|
|||
இந்தியாவிலும் இனி மொபைல் போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்!Viruvirupu, Friday 16 November 2012, 07:53 GMT
இந்தியாவிலும் இனி மொபைல் போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தபால் துறையும் இணைந்து, முதல் கட்டமாக 4 மாநிலங்களில் மொபைல்போன் மூலம் பண பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளன. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்த இந்த திட்டம், முதல் கட்டமாக டெல்லி, பீகார், பஞ்சாப், கேரளா ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் மற்றைய மாநிலங்களுக்கும் திட்டம் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒருவர் பணத்தை பரிமாற்றம் செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிசில் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தான் அனுப்ப நினைக்கும் பணத்தை செலுத்த வேண்டும். யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ, அவரது மொபைல் போன் எண்ணையும் கொடுக்க வேண்டும். அனுப்புநருக்கு மட்டும் ஒரு ரகசிய எண் அளிக்கப்படும். அந்த ரகசிய எண்ணை பணத்தை பெறப்போகும் நபருக்கு அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும். பணத்தை பெறுபவர் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தில் அந்த எண்ணை அளித்து பணம் பெறலாம். விழாவில் பேசிய அமைச்சர் கபில் சிபல், ‘‘இந்த திட்டத்தின் கீழ் பண பரிமாற்றம் செய்யும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு பரிமாற்ற கட்டணத்தை தபால் துறை மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |