Posted by Mohamed Uvais
(jasmin) on 11/19/2012
|
|||
அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால். பெருநாள் நிகழ்வு புகைப்படங்களைக் காண http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=85_2012_EID_Function ஏர்வாடி முஸ்லிம் கூட்டமைப்பு - EMAN அமீரகம். ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜு பெருநாள் குடும்பக் கூட்ட நிகழ்ச்சி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 26.10.2012 வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் எஜூகேஷணல் அகாடமி பள்ளிவாசலில் ஜும்மா தொழுஹைக்குப் பின் பள்ளி வளாகத்தில் விருந்து பரிமாறப்பட்டு சரியாக 2.30 மணியளவில் பெருநாள் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. சகோதரர் முகம்து அலி(enoc) தலைமையில் அப்துல்லாஹ் அவர்களின் மகள் ஆயிஷா சுபைதா கிராத் ஓத அதனின் விளக்கவுரையை சகோதரர் அப்துல் பாஸித் (cater pillar) அவர்கள் வாசித்தார்கள். ஈமான் செயலாளர் இப்ராஹிம் அவர்கள் "ஈமான் கடந்து வந்தபாதை" என்ற தலைப்பில் 1977 வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஈமான், 2012 வருடம் வரை கடந்த 35 வருடமாக செய்து வந்த செயல் விபரங்களை பட்டியலிட்டு, மேலும் ஈமான் இனிமேல் இன்ஷாஅல்லாஹ் செய்யப்போகும் சேவைகளை குறித்தும் சொன்னார்கள். சகோதரர் முகமது அலி(enoc) அவர்கள் "ஈமான் ஜக்காத் கமிட்டி" பற்றி உரையாற்றினார்கள். ஜக்காத் வசூலிக்கப்பட்டு இவ்வருடம் முதல் ஊரில் கொடுக்க ஏற்பாடு செய்து வருவதை குறித்தும், அதை விநியோகம் செய்யும் முறையில் முதலாவதாக செய்யும் போதுள்ள தாமதத்தை குறித்தும், இனி வரும் காலங்களில் அதை முறைபடுத்தி செய்வதை குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். ஈமானின் வளர்சிக்கு உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு சகோதர, சகோதரிகளுக்கும், கருத்து கணிப்பு படிவம் கொடுக்கப்பட்டு அதை பூர்த்தி செய்து பெறப்பட்டது. ஈமான் மக்கள் தொடர்பாளர் சகோதரர் அப்துல்லாஹ்(etisalat) அவர்கள் நடத்திய "வினாடி வினா" வில் சகோதர, சகோதரிகள் அனைவர்களும் சரியான பதில் சொல்லி பரிசுடன் வெற்றி வாகை சூடினார்கள். இதில் சகோதரிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துக் கொண்டார்கள். சகோதரர்கள் முகைதீன்(uae exchange), முகைதீன்(city gold), பரீத் அஹமது(al bahar shipping), இவர்களின் சிறப்பான மேற்பார்வையில் அனைத்து சிறுவர் சிறுமியர் களுக்கு விளையாட்டு போட்டிகள், கிராத் போட்டிகள் நடத்தப்பட்டது.. சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்கள் " நபிகள் நாயகமும் நாமும்" என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரை ஆற்றினார்கள்.வந்திருந்தவர்களின் அறிவு பசிக்கு விருந்தாக இந்த உரை அமைந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சகோதரர் Eng. ஜலாலுதீன் அவர்களுக்கு ஈமானின் சார்பாக நினைவு பரிசை சகோதரர் செய்யது (refri king) வழங்கி சிறப்பித்தார்கள். கிராத் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு சகோதரர்கள் Eng. ஜலாலுதீன், முகமது அலி (enoc), இப்ராஹிம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். சகோதரர் யாஸீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். ஈமானின் இக்கூட்ட நிகழ்ச்சியை சிறப்புடன் ஆக்கி தந்த வல்ல அல்லாஹ்விற்கு அனைத்துப் புகழும். இந்த நிகழ்விற்காக சுறுசுறுப்பாக பணியாற்றியஅனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. இறுதியாக துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு செய்யப்பட்டது. ஈமான். அமீரகம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |